Monday, November 21, 2011

ராஜாராணிக் கப்பல்





ராஜாராணிக் கப்பல்

கப்பல் கத்திக்கப்பல்
செய்யத்தெரியும்
காகித விளையாட்டின்
பால பாடமது
அவளிடம் கொஞ்சம் கற்றுக்கொண்டு
மைக்கூடு ஏரோப்ளேன்
செய்து காண்பித்தபோது
முட்டாள்த் தொப்பித்தாளொன்று
சதுரமாகி
மடிந்து மடிந்து விரிந்ததுன்
முதிர்ந்த விரல்களில்
ராஜாராணிக் கப்பலாய்

எடுத்து வந்து தனியே சுயமாய்
மடிப்பு மாறாமல் பிரித்து
மறுபடி மடித்து முயற்சிக்கையில்
சதுரம் கிழிந்து கைக்கொன்றாய்
இரு நீள் சதுரம்

காகித மடிப்புகளை வெறித்த
பார்வையில் நிலைத்தன
கருப்பை அண்டத்துயிர்
உள்ளொடுங்கிக் குவித்த
கை மடிப்புகள்

ரேகைகள்
யார் செய்து பிரித்த
ஒரிகாமி
-கலாப்ரியா

1 comment:

உயிரோடை said...

எனக்கும் கப்பலும் கத்திக் கப்பலும் மட்டுமே செய்ய தெரியும். சில விசயம் கைமீறியதாகவே இருக்கு எப்போதும்