Saturday, April 7, 2012

கவிஞர் இசைக்கு


நான்
உன் கவிதையயைப் படிப்பது பாராமல்
காலை வெய்யில் தாழ்வாரம் நீங்குகிறது

நான்
உன் கவிதையயைப் படிப்பது கேளாமல்
அரற்றுகிறது கோடைக் குருவி

நான்
உன் கவிதையயைப் படிப்பது உணராது
கூடு கட்டிக் கொண்டிருக்கிறது குளவி

நான்
உன் கவிதையயைப் படிப்பது தெரியாமல்
சத்தமெழத் துவைக்கிறாள்
பக்கத்து வீட்டுக் குமரு

நான்
உன் கவிதையயைப் படிப்பது மறந்து
அவள் திரைத்த தொடை பார்க்க
வழக்கமான ரகசிய
ஒளிவிடம் ஏகுகிறேன்