Friday, February 27, 2009

சுகந்தி சுப்ரமணியன்

என்ன விதமான வாழ்க்கை வாழுகிறேன் என்று வெட்கமாக இருந்தது, சுகந்தி இறந்து போன செய்தியை இன்றுதான் தெரிந்ததும். மு.கு ஜெகன்னாத ராஜா இறந்து போன செய்தியும் மிக மிக தாமதமாகவே தெரிந்தது. உண்மையில், அவர் இறந்து ஒன்றிரண்டு தினங்கள் ஆகியிருந்த போது, ராஜபாளையம் வழியாகச் சென்று கொண்டிருந்தோம். அவர் வீட்டின் தெரு முனையில் ஒரு பிரஸ் இருக்கும் அது எப்போதும் கண்ணில் படும். உடனேயே அவர் நினைவு வரும்.அன்று, கணப்பித்தம் க்ஷணப் பித்தம் மாதிரி ராஜாவைப் பார்த்து விட்டு வருவோமோ என்று தீவிரமாகத் தோன்றியது.வாயிலிருந்து கெட்ட வாசனை வீசி, வேண்டாண்டா என்று தடுத்து விட்டது.அன்று ஜகன்னாத ராஜா உயிருடேனேயே இல்லை என்கிற விஷயம் தெரிய வந்த போது, கணநேரம் இருள் கவ்வி ஒரு வகை பயப் பந்து வயிற்றில் சுழன்று மறைந்தது.அருமையான மனுஷர். பல நல்ல சாதனைகளைச் செய்திருக்கிறார்.அவருடன் 25 வருடங்களுக்கு முன் டில்லி சென்றது மறக்க முடியாத அனுபவம்.ஆதர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியாவில் அவரும் சிட்டியும்தான் என்னை உறுப்பினர்களாகச் சேர்த்தார்கள். அந்தப் பயணத்தின் போதுதான் சாரு எனக்கு அறிமுகமானார். அந்த சந்திப்பை வைத்து ஒரு கதை கூட கணையாழியில் எழுதி இருக்கிறார்.
சுகந்தியின் கணையாழிக் கவிதைகளின் பிரியமான வாசகன் நான். ஜெய மோகன் அவரது வாழ்க்கை பற்றியும் சுப்ர பாரதி மணியன் பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார்.அவர்களது நெருக்கத்தின் காரணமாக சற்று அதிகமாகவும் எழுதியிருக்கிற மாதிரி தோன்றுகிறது.நானும் மரணம் வரை சென்று வந்தவன் என்பதால்,மாத்திரைகளின் துணையோடு வாழ்பவனென்பதால் சுகந்தியை 95-ல் சந்தித்த போது ஒரு இனம் புரியாத ஒட்டுதல் ஏற்பட்டது. சுகந்தியும், என் மனைவி, குழந்தைகளும், திலகவதியும், அன்று ரொம்ப அந்நியோன்மாய் பேசிக் கொண்டு இருந்தார்கள்..நான் சுகந்தியுடன் நிறையப் பேச நினைத்தவன் அந்த நெருக்கத்தின் காரணமாக, பேசாமலிருந்தேன், என் மனைவி சற்றுப் பேச்சை நிறுத்திய சமயம் ஒரு திடீர் மௌனம் சூழ்ந்தது.சுகந்தி கேட்டார் சார் என்ன பேசவே மாட்டேங்கிறேங்க.நான் அப்போதும் பேசவில்லை.சிரிக்க மட்டும் செய்தேன்.
அவருடைய கவிதைகளில் பெண் வாழ்வு சரியாகவே பிரக்ஞை பூர்வமாகவே சொல்லப் பட்டிருக்கிறது.சிலர் சொல்கிற மாதிரி பிறழ்வு பூர்வமானதில்லை.அவருடைய கவிதைத் தலைப்புகள் முக்கியமானவை.(மீண்டெழுதலின் ரகசியம்)அவரைப் பற்றி தெரிந்திருந்தாலும், அவருடைய குழந்தைகளின் முகங்களிலிருந்து அவர்கள் வாழ்க்கையை உணர முடிந்தாலும்,(மணியன் முகத்திலிருந்து இதைக் கண்டுணர முடியாது, அவர் இன்னொரு அற்புதப் பிறவி.) அதன் பாதிப்பில் சுகந்தியின் மனோநிலை இருந்திருந்தாலும்,அவருடைய எழுத்து சரியான தளத்திற்கு வந்து விடுகிறது. எனக்கு அவர் கவிதை வரிகளில் ஞாபகத்தில் அதிகமாய் இருப்பது.’’தோல்விகள் தொடர்கையில் நான் என்னுடனே நட்புக் கொண்டேன்...”,இதன் சாத்தியம் எனக்கு என்றுமே வசப் பட்டதில்லை.என்றாலும் கூட இதில் ஒரு வசீகரமும், நம்பிக்கையும் தென்படுவது தற் செயலல்ல. அவருக்கு முந்திய பெண் கவிஞர்களான மீனாட்சி, திரிசடை, இவர்களிடமிருந்து மிகவும் வேறுபட்டு 90 களின் பெண் கவிதைகளுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாய் அமை ந்தவை சுகந்தியின் கவிதைகள் எனக்கு ரொம்ப சுகந்தியின் நீட்சியாக பல கவிதைகள் வெளிவந்துள்ளன.
எனக்கு கானல் நீர் படத்தில் பானுமதி பாடுகிற பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது.
வாழ்க்கையெல்லாம் வெறும் கேள்வி மயம்
இதில் வளர்ந்தது சமுதாயம்-இங்கு
வந்ததின் பின்னே கேள்வியிலேயே
வாழ்வதுதான் நியாயம்.

Sunday, February 22, 2009

சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவோ....

பட்டாசலுக்கு அடுத்து தார்சால்.அது வரை தான், உத்திரம் பரத்தி, கட்டை குத்தி மச்சு கட்டியிருக்கும். அதற்குக் கீழ் உள்ள பகுதிக்கு (துத்த)நாகத் தகடு வேய்ந்து, அதன் கீழ் வெக்கை தெரியாமலிருக்க, மூங்கில்ப் பாயில் தட்டி வேய்ந்து இருக்கும்.அது கீழ்த் தார்சால். தலை வாசலிலிருந்து வீடு மற்றும் காம்பவுண்டிற்குள் வர ஒரு முடுக்குப் போன்ற நடையோடம் (நடைக்கூடம்). நடையோடம் ஜில்லென்றிருக்கும்.நன்றாக காற்று வீசும். சிலசமயம் நல்ல கோடை நேரத்தில் அதில் யாராவது படுத்திருப்பார்கள்.வியாபாரிகள் யார் வந்தாலும் அங்கேதான் உட்கார்ந்து பொருட்களை கடை விரிப்பார்கள்.பழைய பேட்டையிலிருந்து எண்ணெய்ச் செட்டியார், வந்து உட்காரும் முன்னேயே அம்மா சத்தம் போட ஆரம்பித்து விடுவாள், ‘செட்டியாரே சொவரை எண்ணெய் ஆக்கீராதீரும் என்று.செட்டியார் சிரித்துக் கொண்டே சொல்லுவார், ’ஆச்சி எப்படா நான் வருவேன்னு பார்த்துக்கிட்டே இருப்பாக போல’ என்று. செட்டியார் என்றால் வயதான ஆள் இல்லை. சின்ன வயசு.கறுப்பென்றால் அப்படியொரு கறுப்பு, எள்ளுப் புண்ணாக்கு போல. தலை பம்பை மாதிரி பரந்து கிடக்கும் முடி சுருட்டையாய் இருக்கும்.தலை முடி பூராவும் எண்ணெயாய்த்தான் இருக்கும். ’’முதல் தேதி” சினிமாவில் வந்த எம கிங்கரன் போல இருப்பார்.
வெற்றிலை போட்ட வாய் எப்பவும் சிரிச்ச மாதிரி இருக்கும்.தெரு பூராவுக்கும் அவர் தான் நல்லெண்ணை விற்பவர்.ஒற்றை மாட்டு வில் வண்டியில் வருவார்.வண்டியை தெருவின் கீழக் கடேசியில் அவிழ்த்துப் போட்டு விட்டு, வண்டியின் கீழ் தொங்கிக் கொண்டிருக்கும் கயிற்றுத் தூளியிலிருந்து மாட்டுக்கு வைக்கோல் எடுத்துப் போட்டு விட்டு எண்ணெய் டின்னையும் செம்பையும் எடுத்துக் கொண்டு வீடு வீடாகக் கிளம்பி விடுவார். நடையோடத்தில் உட்கார்ந்து கொண்டு ஆச்சியோவ் என்று சத்தம் கொடுப்பார், அம்மா எண்ணெய் விட்டு வைத்திருக்கும் பாரி கம்பேனி பீங்கான் ஜாடியை எடுத்து வருவாள்.பாரீஸ் என்று ஆங்கலத்தில் எழுதியிருக்கும், திருகு வைத்த மூடியில்.அதில் என்ன வரும், சாக்லேட்டா, என்று பல முறை யோசித்திருக்கிறேன், சிறு வயதில். தெரிந்து கொண்டதில்லை.பிற்பாடு யாரோ சொன்னார்கள், ஜாடியே பாரி கம்பெனி தயாரிப்பு என்று.ஆனால் எனக்கு அதை ஒப்புக் கொள்ள கஷ்டமாகவே இருந்தது.
காலியாகாமல் இருக்கும் கொஞ்ச எண்ணையை, முதலில் செம்பில் விட்டு அளந்து தனியே வைத்துவிட்டு, அம்மா தயாராய் கொண்டு வந்து வைத்திருக்கும் போசனச் சட்டியில் (போஜன சட்டி) எண்ணையில் போட்டிருக்கும் சிரட்டைக் கருப்பட்டியை எடுத்து வைப்பார். அவர் எடுத்து வைக்க காத்திருந்த மாதிரி கருப்பட்டி லேசாக இளகி உடைந்து உட்காரும்.செட்டியார் வாயில் ஒரு துண்டு எடுத்துப் போட்டு விட்டு ”ஏயப்பா பஸ்ட்டாவுள்ள எண்ணையில்லா, இன்னும் மணக்கே‘’என்பார்.அம்மாவுக்கு அவர் கருப்பட்டியைத் தின்பது அவ்வளவு பிடிக்காது. எனக்கு அந்த ருசி அவ்வளவு பிடித்தமாயிருக்காது, செட்டியார் சொல்லுவார்,``சாப்பிடுங்க தம்பீ வாய்ப் புண், வயித்துப் புண்ணுக்கு நல்லதுல்லா என்று.அம்மா ஒரு துண்டு வாயில் போட்டு விட்டு, அப்படியொன்னும் நல்ல எண்ணை இல்லவே, ஜாடியில பாரும், ஒரே கசடா இருக்கு என்பாள், அதற்குள் செட்டியார் ஜாடியின் உள் பாகத்தைத் துணியால் துடைக்க ஆரம்பித்து விடுவார்.,ஜாடி பளீரென்றிருக்கும்.. ``ஆச்சி, எவ்வளவு விடட்டும், ரெண்டு செம்பு விடட்டுமா, அடுத்த ட்ரிப் வாறதுக்கு நாளாகும்,”என்பார்.எங்கவே போறேரு, காசிக்கா போப்போறேரு அதுக்கு இன்னும் வயசிருக்கு வே உமக்கு, ரெண்டு நாளி வேண்ணா விடும்,செக்கடி எண்ணெய் நல்லாருக்காம் தெக்கு வீட்ல சங்காச்சி சொன்னா,அடுத்த தடவை அங்க தான் வங்கிப் பாக்கணும், உம்ம அப்பா காலத்துல எண்ணைக் கருப்பட்டி இப்படியா கசக்கும்,” என்பாள்.
ரெண்டு பக்கா விட்டாலும் நல்லதுதான் அம்மாவுக்கு, கொஞ்சமா செலவாகுது, தோசைக்கே எவ்வளவு செலவாகுது, இதுல குளிக்க கொள்ள வேற எண்ணை வாங்க வேண்டியிருக்கு, ஆறு மாசத்துக்கு ஒரு தரம் பூவுக்கு பூவு நெல் அறுத்த பிறகுதான் இவருக்கு ரூவா கொடுக்க முடியுது.பலசரக்கு கடையிலும் பற்று வழின்னாலும் அங்க எண்ணெய் இந்த மாதிரி நல்லாருக்காது.அது மிஷின் எண்ணை,” என்று செட்டியார் போன பின் அக்காவிடம் அலுத்துக் கொள்வாள்.சரி ரெண்டு செம்பு விடும் என்பாள் நல்லா இல்லேன்னா குடுத்துவிட்ருவேன் என்பாள்.அதுக்கும் ஒரு பலமான சிரிப்பு வரும் செட்டியாரிடமிருந்து.செட்டியார் பென்சிலை காதில் வைத்திருப்பதே தெரியாத மாதிரி முடி, ஒரு ப்ளாக் நைட் பென்சில், பச்சைக் கலரில் வத்திருப்பார்.ஆச்சி கத்தி குடுங்க என்பார். உமக்கு எங்க வீட்டுக்கு வந்தாலே பென்சில் மொட்டையாயிருமே என்பாள், அக்கா.சொல்லிக் கொண்டே ஒரு மடக்குக் கத்தியை எடுத்துத் தருவாள். அவரே இடுப்பில சாவிக் கொத்தோட ஒரு கத்தி வைத்திருப்பார். ``இல்லை ஆச்சி, சுவர்ல எழுதுதேன் பாத்திங்களா சீக்கிரம் கரைஞ்சிருது பென்சில், என்பார். சொல்லிக் கொண்டே நடையோடச் சுவரில், தேதி போட்டு ரூவா அணா பைசா கணக்கில் எழுதுவார்,``ஆச்சி, போன பூவுக்கே ஐயா பாக்கி வச்சுகிட்டுத்தான் குடுத்தாக, இப்ப பிசானத்துலயாவது பூராத்தையும் குடுக்கச் சொல்லுங்க” என்பார்.எல்லாரின் முகமும் வாடி விடும்.அவர் மட்டும். மறுபடி ஹெஹ்ஹஹ்ஹே என்று சிரித்து, வரட்டுமா ஆச்சி, வேய் தம்பியா பிள்ளை வண்டிக்கி வாரேறா கடலை மிட்டாய் தாரேன் என்று என்னிடம் சொல்லுவார். ஒரு தடவை இப்படிக் கூடப் போன போது பெரிய பாளமா ஒரு துண்டு எள்ளுப் புண்ணாக்கு தந்தார். ஆசையாய்க் கடித்தேன், ஒரே நற நறப்பு, கல்லு வேற, இனிப்பும் இல்ல ருசியும் இல்ல, அப்படியே துப்பி விட்டேன். ’வேய் என்ன துப்பீட்டேரு, மாட்டுக்காவது குடுத்திருப்பனே’’ என்றார்.அதிலேருந்து அவர் கேட்டாலே போரும் வே செட்டியாரே என்பேன். இப்படி ஒரு தரம் சொல்லும் போது அப்பா இருந்தார். ``ஏல, ச்சீ மரியாதை வேண்டாம் நாயே” என்று சுளீரென்று முதுகில் அறைந்தார்.செட்டியார் மேல் கோவமாய் வந்தது.அய்யயோ புள்ளையப் போட்டு அடிக்கீகளே என்று என்னை இழுத்து வயிற்றோடு அணைத்துக் கொண்டார்.மடியில்இரண்டு மூன்று சிட்டைகள் வைத்திருந்தார், அது தொந்தியை இன்னும் பெரிதாகக் காட்டியது. கை வைத்த பனியன் மாதிரி மல் சட்டை. இடுப்பு வேட்டிக்கும் சட்டைக்கும் நடுவே புதிதாய்ப் போட்ட பூனூல்.அதன் கனத்த பிரி இன்னும் நினைவிருக்கிறது. அவர் மேல் கோபம் நீங்கியது.ஆனால் எண்ணெய்ப் பிசுக்கு வாசனை குமட்டியது.அவர் தொட்டதில், புறங்கையிலும் கன்னத்திலும் எண்ணெய்.அதைத் துடைத்து காலில் தேய்த்தேன், `` ஆங், தலையில தேயுங்க சூட்டுக்கு நல்லதுல்லா” என்று சொல்லிய படியே வெளியேறினார்.
செட்டியார் துணைக்கு ஒரு பையனை அழைத்து வரத் தொடங்கி இருந்தார்.என் வயதுதான் இருக்கும்.பெரும்பாலும் அவன் அவிழ்த்துப் போடப் பட்ட வண்டியின் கோஸ் பெட்டியில் உட்கார்ந்து சாட்டைக் கம்பை காற்றில் வீசிக் கொண்டே எதாவது பேசிக் கொண்டே இருப்பான்.அல்லது தூங்கி விடுவான். ஆனால் செட்டியார் எண்ணை ஊற்றி விட்டு. ஒரு வளவை விட்டுக் கிளம்பினால் தெரிந்துவிடும். விழித்து எழுந்து உட்கார்ந்து கொள்ளுவான்.அவரும் அந்த வீட்டில் கடைசியாய்ப் பேசிய பேச்சின் மிச்சத்தோடும் சிரிப்போடும்தான் வளவை விட்டு வெளியே வருவார். யானை வரும் முன்னே ... என்கிற கதை மாதிரித்தான்.நாங்கள் தெருவில் விளையாடுகிறதை ஆசையோடு பார்த்துக் கொண்டிருப்பான்.நானாகத்தான் அவனோடு பேச்சுக் கொடுத்தேன் ஒரு நாள். வண்டிக்கு புதிதாக மாடு வாங்கியிருந்தார் செட்டியார். பழைய மாடு அநியாயத்துக்கு சிலுப்பும்.புது மாடு சாதுவாக இருந்தது. கொம்பு சீவி பள பள வென்று கறுப்பாய் பார்க்க பயமாய் இருந்தது. ஆனால் படு சாது.
அதைப் பற்றிப் பேச ஆரம்பித்து. பழக்கம் ஆகி விட்டது. அவன் ஐந்தாம் வகுப்போடு நின்றிருந்தான். நான் ஆறாவது வகுப்பு போன புதிது. அதாவது ஹைஸ்கூல் போன புதிது. அவனிடம் அது பற்றிப் பீற்றிக் கொண்டிருந்தேன்.அப்புறம் அவன் நல்ல நண்பனாகிவிட்டான். சேக்காளி ஆகவில்லை. நாங்கள் பேசுவதும் “நண்பா, உன்னைக் காண ரொம்ப ஆவலாயிருந்தேன்” என்று கடிதம் எழுதுகிற தொனியில்தான் பேசிக் கொள்ளுவோம். மாதத்துக்கு ஒரு தடவை போலத்தான் செட்டியார் தெருவுக்கு வருவர்.அவன்தான் ஒரு சமயம் கேட்டான் எங்க செட்டியாரு உங்க பெரிய அண்ணன் கிட்ட அடிக்கடி ரகசியம் பேசுகிறாரே என்னவாயிருக்கும் என்று. எனக்குத் தெரியவில்லை.எங்க செட்டியார் சம்சாரம் பெரிய சண்டக் காரியாக்கும்.வெளியவே வராது. எல்லார் கூடவும் சண்டைதான். அதைப் பத்தித்தான் அன்னைக்கி பேசிக்கிட்டாங்க என்று சொன்னான்.அது வரைக்கும் என் கிட்டக்க நின்னு பேசிக்கிட்டிருந்தாங்கடே அதுக்கப்புறம் என்னமோ என்னை தள்ளிப் போலே என்று செட்டியார் திட்டி விட்டார், என்றான்.
``யார் பையன்’’ படம் பாப்புலர் டாக்கிஸில் போட்டிருந்தார்கள். செகண்ட் ரன்.(இரண்டாம் தடவை) முதலில் ரத்னாவில் வந்தது.நான் பார்த்ததில்லை. அப்பாதான் கூட்டிக் கொண்டு போனார். நியூஸ் ரீல் போடும் போது சோபா டிக்கட்டில் நான் மட்டும்தான் இருந்தேன். அது அப்பாவுக்கு வேண்டப் பட்ட தியேட்டர். அதில் பங்குகள் இருந்ததாகக் கூடச் சொல்லுவார்கள்.என்னை விட்டு விட்டு அப்பா மேனேஜர் ரூமில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.படம் ஓட ஆரம்பித்ததும் யாரோ பக்கத்தில் பயங்கரமாகத் தொடயை தட்டி, சோபாவைத் தட்டி அனுபவித்துச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். .நானும் சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். கொஞ்ச நேரத்தில் அடி என் மேல் விழுந்தது.சிரிக்கும் உற்சாகம். நான் பக்கத்தில் திரும்பினேன், செட்டியார். பக்கத்தில் ஒரு பெண்.செட்டியார் நல்ல முழுக்கை சட்டை போட்டு, கையை மடித்து விட்டிருந்தார். பெண்ணும் செட்டியாரை நெருங்கி உட்கார்ந்திருந்தாள். தலையில் எண்ணை வழியவில்லை.அண்ணன் உபயோகிக்கிற மரிக் கொழுந்து செண்ட் வாசனையை அவரிடமிருந்து அப்போதுதான் உணர்ந்தேன்.அவரும் என்னைப் பார்த்து விட்டார்.தம்பீ வாரும் வேய். தனியாவே வந்தேரு என்று கேட்டார்,சுற்று முற்றும் பார்த்தபடி.இல்லை அப்பா வந்திருக்காங்க என்றேன்.பெரிய அய்யாவா என்று மறுபடி கேட்டார். சரி சரி படம் பாரும் என்றார்.
அதற்கப்புறம் தியேட்டர் பூராவும் சிரித்துக் கொண்டிருந்தது.செட்டியார் சத்தத்தையே காணும். திரும்பிப் பார்த்தேன்.அந்த பொம்பளை மட்டும் படத்தில் லயித்து சிரித்ததுக் கொண்டிருந்தாள்.
வெள்ளை அடிக்க வந்த லச்சுமணன் கேட்டான் அப்பாவிடம் ``அய்யா இந்த எண்ணெய்க் கணக்கை விட்டுட்டு அடிக்கவா இல்லை அடிச்சரலாமா, அவர்தான் புகஞ்சு போய்ட்டாராமே’’ என்று.அப்பா அவசரமாக, நில்லு நில்லு அதைக் குறிச்சிக்கிடுவோம், என்று தன் கணக்கு நோட்டில் குறித்துக் கொண்டார்.அப்பொழுதுதான் எனக்குத் தெரியும் செட்டியார் செத்துப் போனது. அம்மாவிடம் கேட்டேன். ’’ஆமா, பாவம் பொட்டு பொடுக்குன்னு போய்ட்டான். முப்பத்திஅஞ்சு வயசு கூட இருக்காது, வாய்க் குத்துன்னு சொன்னானாம், தண்ணீ கொடுக்கறதுக்குள்ள சீவன் போய்ட்டாம் என்றாள்.’’நண்பா உன்னை தேடுகிறது’’ என்று சினிமா வசனம் போல் மனசுக்குள் ஓடியது....

வெள்ளை அடிக்க வந்த லச்சுமணன் கேட்டான் அப்பாவிடம் ``அய்யா இந்த எண்ணெய்க் கணக்கை விட்டுட்டு அடிக்கவா இல்லை அடிச்சரலாமா, அவர்தான் புகஞ்சு போய்ட்டாராமே’’ என்று.அப்பா அவசரமாக, நில்லு நில்லு அதைக் குறிச்சிக்கிடுவோம், என்று தன் கணக்கு நோட்டில் குறித்துக் கொண்டார்.அப்பொழுதுதான் எனக்குத் தெரியும் செட்டியார் செத்துப் போனது. அம்மாவிடம் கேட்டேன். ’’ஆமா, பாவம் பொட்டு பொடுக்குன்னு போய்ட்டான். முப்பத்திஅஞ்சு வயசு கூட இருக்காது, வாய்க் குத்துன்னு சொன்னானாம், தண்ணீ கொடுக்கறதுக்குள்ள சீவன் போய்ட்டாம் என்றாள்.’’நண்பா உன்னை தேடுகிறது’’ என்று சினிமா வசனம் போல் மனசுக்குள் ஓடியது.

Visitors