Saturday, June 6, 2009

இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னால் பழைய கவிதை நோட்டுக்களைப் பார்க்கிற சந்தர்ப்பம் வாய்த்தது.சில கவிதை வரிகள் கண்ணில் பட்டது.

என்னுடைய
இளஞ்சாராயத்தை
என் கோப்பையுடனேயே
எடுத்துக் கொள்
இன்னொன்றுக்கு மாற்றுகையில்
நுரைகள் குறைந்து விடலாம்.
அது விடாமல் துரத்திக் கொண்டுமிருந்தது. இது என் கவிதையல்ல.
இதை நான் எப்படி மறந்திருந்தேன், என்று யோசித்துக் கொண்டுமிருந்தேன்.
அது ஏன் என்னை துரத்திக் கொண்டிருந்தது என்பதற்கு விடை சொல்வது போல் ராஜமார்த்தாண்டனின் மரணச் செய்தி வந்தது.நுரைகள் குறையாமல் மார்த்தாண்டனை காலம் யார் கோப்பையில் ஊற்றித் தரும்.
ஒப்பாரி தெரிந்த, வயதான ஆத்மா ஒன்று என் நெருங்கின சொந்தத்திலேயே சாகக் கிடக்கிற நேரம் இது.
``செகம் பூரா ஆளலாமே
திரும்பி நல்லாச் சாகலாமே’’

Visitors