கலாப்ரியா கவிதைகள் |
விலை ரூ.180/- |
புதுக் கவிதை வரலாற்றில் மட்டுமல்ல, நவீன தமிழ் இலக்கிய வரலாற்றுப் பக்கங்களிலும் கலாப்ரியா ஒரு தவிர்க்க முடியாத அத்தியாயம். ஒரு வகையில் தீரா நதி. ஒரு வகையில் நகல் செய்ய முடியாத ஒரு வெளிச்சம். பின்தொடரமட்டுமே முடியும். எல்லாத் தீவிரமான படைப்புக்களும் கோருகின்ற தீவிரமான பின்தொடரல் அது. வண்ணதாசன் நவீன தமிழ்க்கவிதையின் ஒரு அசல் முகம் கலாப்ரியா. மிக மிக இயல்பான நிகழ்வுகளை சராசரியான எளிய மொழியில் சொல்வது மட்டுமல்ல. அதன் அந்தரங்கத்தில் அணுத்தெறிப்பான ஓர் அவலம் வெடித்துத் திறப்பதிலும் கலாப்ரியாவின் கலை நுட்பமாகிறது. கவிஞர் சிற்பி. பாலசுப்ரமணியம் சந்தியா பதிப்பகம் வெளியீடு.கடை எண்64.65 புத்தக கண்காட்சி, சென்னை. (முழுத்தொகுப்பு) |
Friday, January 7, 2011
இந்த ஆண்டு வெளிவந்திருப்பவை...
தீர்க்க ரேகைகள்....
”இந்த நூற்றாண்டில் நாம் யாருடனும் சண்டையிட முடியாது...நீங்கள் தெருவின் இந்த முனையில் ஒருவருடன் சண்டையிட்டால்..அடுத்த முனையில் அவரின் உதவி நமக்கு தேவைப்படும்...”-அசோகமித்திரன் “ஒற்றன்” நாவலில்.
அன்பிற்குரிய நண்பருக்கு, வணக்கம். நலம் தானே. நானும், நண்பர் தேனுகாவும், திரு மா.அரங்கநாதன் அவர்களும் ராபர்ட்-ஆரோக்கியம் அறக்கட்டளை வழங்கி வரும் சாரல் இலக்கிய விருதின் நடுவர் குழுவில் தேர்வாளர்களாக இயங்கி வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த ஆண்டின் சாரல் இலக்கிய விருது முதுபெரும் எழுத்தாளர் திரு அசோகமித்திரன்அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. உங்கள் வருகையால் விழா மேலும் சிறக்கும். அவசியம் வருக! நன்றி! அன்பாக பங்கேற்போர்: அன்று இரவு 8 00 மணிக்கு ஜேடி ஜெர்ரியின் கலம்காரி ஆவணப்படம் திரையிடப்படும். இடம்: பிலிம் சேம்பர் அரங்கம், சென்னை, நாள்:9.01.2011 நேரம் மாலை 6 மணி. | ||||||||||
| ||||||||||
|