கேணி....
நீரிறைத்துத் தொட்டி
நிறைத்து விட்டு
ஞாபகக் கிணற்றினுள்
இறங்குகிறது வாளி
இரு கைப்பிடித் தழுவி
விரைவாய் மேலேறும்
நனைந்த கயிற்றிலிருந்து
பொடீ நீர்ச்சிதறல்....
கேணியின் எதிரெதிர்ச்சுவர்
இணைத்து வரையுது
கிழக்கு வெளிச்சமோர்
குட்டி வானவில்.....
சுற்றிலும் நின்றும் இருந்தும் கிடந்தும்
கன்றுகள் பசுக்கள் காளைகள்
காலத்தை அசை போட்டபடி....
(1.1.11)
(வண்ணதாசனின் ‘கேணி’ உரையாடலைக் கேட்ட பாதிப்பில்)