Friday, January 14, 2011

நன்றி: அறிவுமதியின் ”தை” இதழ்

அசோக...ம்

மார்க்கச்சையுமின்றி

குப்புறக்கிடந்தாய்

இறந்தொரு

கடற்கரையோரம்

இரண்டு

டால்ஃபின்கள்

உன் மார்புகளை

ஆளுக்கொன்றாய்

வைத்திருந்தன

அவை பிடிபடும்போது

தீவின் காட்சியகத்தில்

கூர் மூக்கிலேந்தி

புதிய விளையாட்டொன்றைக்

காண்பிக்க உதவுமென்று.


அலகிலா விளையாட்டு

முழுதுமாய் தன்னை

வெளிப் படுத்திக் கொண்டு

விட்டோமோவென்று

பழைய வரிகளின்

பொய்ம்மைகள் புதிய

உங்களை வெருட்டக் கூடுமென்று

அவற்றில் சிலவற்றை

ரசித்ததை நினைத்து நீங்களே

பின்னாளில்

வெட்கப் பட்டு விமர்சிக்கலாமென்று

மறு வாசிப்பென்ற

கடப்பாரைகளால்

இடிக்கப் பட்டு

தங்கள் பீடங்களை

இழந்தவர்களின் பட்டியலை எண்ணிப்

புதிய பதற்றங்களுடன்

புரண்டெழுந்த.

ஒருக்

கவிதை சொல்லி

சன்னல் திறக்கிறான்.

முகத்திலறைகிறது

இன்றும் மொட்டவிழும்

பவளமல்லியின்

வாசனை.