Friday, January 14, 2011

நன்றி: அறிவுமதியின் ”தை” இதழ்

அசோக...ம்

மார்க்கச்சையுமின்றி

குப்புறக்கிடந்தாய்

இறந்தொரு

கடற்கரையோரம்

இரண்டு

டால்ஃபின்கள்

உன் மார்புகளை

ஆளுக்கொன்றாய்

வைத்திருந்தன

அவை பிடிபடும்போது

தீவின் காட்சியகத்தில்

கூர் மூக்கிலேந்தி

புதிய விளையாட்டொன்றைக்

காண்பிக்க உதவுமென்று.


அலகிலா விளையாட்டு

முழுதுமாய் தன்னை

வெளிப் படுத்திக் கொண்டு

விட்டோமோவென்று

பழைய வரிகளின்

பொய்ம்மைகள் புதிய

உங்களை வெருட்டக் கூடுமென்று

அவற்றில் சிலவற்றை

ரசித்ததை நினைத்து நீங்களே

பின்னாளில்

வெட்கப் பட்டு விமர்சிக்கலாமென்று

மறு வாசிப்பென்ற

கடப்பாரைகளால்

இடிக்கப் பட்டு

தங்கள் பீடங்களை

இழந்தவர்களின் பட்டியலை எண்ணிப்

புதிய பதற்றங்களுடன்

புரண்டெழுந்த.

ஒருக்

கவிதை சொல்லி

சன்னல் திறக்கிறான்.

முகத்திலறைகிறது

இன்றும் மொட்டவிழும்

பவளமல்லியின்

வாசனை.

2 comments:

பத்மா said...

முதல் கவிதை இதழோரம் சிறு புன்னகை தருவிக்கும் நேரம் ,இரண்டாவதின் நீண்ட வாசிப்பு நறுமணத்துடன் முடிகிறது ...

very nice kalapriya sir

தமிழ்ச் செல்வன்ஜீ said...

கால வெள்ளத்தை தாண்டி நிற்கும் கலாப்ரியாவின் கவிதையில் பிழை இருப்பதை சுட்டிக்காட்ட உறுத்தலாகத்தான் இருக்கிறது,இருந்தாலும் ....அந்த கவிதை இப்படி இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது
,எனக்கதன் கூடும் தெரியும்
குஞ்சும்தெரியும்
பாவமதற்கு-என்
பாஸை புரியாது...,
எனெனில் அதன் பாஸை கலாவுக்கு தெரிந்ததால் தானே அது கூடு தேடி அலையும் சோகம் புரிந்தது