வீசுகிற வசந்தத்தின் இந்த
அடிநாளில்
கோடை நிலவென
தீர்க்கமான ப்ரியங்களுடன்
எங்களுக்காய் உங்கள் மனம்
விகசிக்கட்டும்.....
எனக்கு
எவ்வளவும் பிரியமானவர்களே
எங்கள் மணவாசல்
வாருங்கள்
வாழ்த்துங்கள்
(19.05.1978)
இந்தக் கவிதையை எங்கள் திருமண அழைப்பிதழில் எழுதியிருந்தேன். இன்று இரண்டு விஷயங்களுக்காக இது நினைவு வந்தது.நண்பர் சி.மோகனின் மகள் மிதிலாவுக்கு வருகிற 19.06.2011-ல் திருமணம். அந்த அழைப்பிதழில் அவர் ஒரு அழகான கவிதை எழுதியிருக்கிறார். இன்னொன்று இன்றுதான்(19.05.2011) எங்கள் திருமண நாள்.