Tuesday, June 8, 2010

ஓடும் நதி-35


முத்துமாரி


மதுரைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது அதன் மாணவர் விடுதியில், தமிழ் நிஜ நாடக இயக்குநர், முனைவர் மு.ராமசாமியின் அறையில் பெரும்பாலும் தங்கிக் கொள்வேன், அவர் அப்போது ஆராய்ச்சி மாணவர்.சுப்புராஜ், கண்ணன், ராஜாசங்கர், மு.சிவலிங்கம், சந்திரபோஸ், ஜி.பாலச்சந்திரன்(தற்போது பிரபல ஐ.ஏ.எஸ் அதிகாரி, இஸ்ரோவில் பணி புரிகிறார், அவருடைய சஃபாரி உடையொன்றை பெரும்பாலும் நான்தான் அணிந்து கொள்வேன்.) என்று சகமனதுக்காரக் கூட்டம் எங்களைச் சுற்றி இருக்கும். காலை நேரம், டாய்லட் அருகே, ஒரே கலாட்டாவாக இருக்கும். இதில் ஒருவர் மட்டும் உள்ளே போனால், வருவதற்கு நேரமாகும். வந்ததும் புதுப் புது ஐடியாக்களாகச் சொல்லுவார்.பாலச்சந்திரனும் நானும் அவர் செல்லும் அறைக்கு “ஞானபீடம் என்று பெயர் சூட்டி, எழுதியும் வைத்தோம்.

உண்மையில் இங்கேயும் சரி, முடி திருத்தகத்திலும் சரி, திடீர் மழைக்கு சாலையோரம் எங்காவது ஒதுங்கி நிற்கும் போதும் சரி, நம்மால் எதையாவது, யோசனை செய்வதை விடுத்து வேறு ஏதாவது செய்ய முடியுமா. சலூனில், கண்ணாடி., கண்ணாடிக்குள் கண்ணாடி என்று பிம்பங்களை சற்று நேரம் வேடிக்கை பார்க்கலாம். அல்லது ஏதாவது ஒரே காலண்டர் படங்களைத் திரும்பத் திரும்பப் பார்க்கலாம். சிறு வயதில் அப்பா கொண்டு விட்டு விட்டு சென்று விடும், திருமலை சலூனில் என் முறையை விழுங்கி, பெரியவர்கள் எல்லாம் சிகை திருத்திச் சென்று கொண்டேயிருக்க, நான் சிறிதாக ஒட்டியிருக்கும் தாயுள்ளம்-டைரக்‌ஷன், ராம்னாத் சினிமா விளம்பரத்தையே அதில் ஆடிக் கொண்டிருக்கிற மாதுரிதேவியையே பார்த்துப் படித்துக் கொண்டேயிருப்பேன். கொஞ்சம் வளர்ந்த பின், பாலன் கடையில்சொந்த ஊரே சொர்க்க பூமிடப்பிங் பட போஸ்டர். பாலன், நன்றாக முள் எடுப்பான்.அதற்கென்றே அவ்வப்போது அவன் கடைக்கு, வெதனத்தோடு காலை நொண்டிக்கொண்டே பெண்கள் உட்பட பல ஆட்கள் வருவார்கள்.

சவரம் செய்து தேய்ந்து போன கத்திகளை, நகம் வெட்டவும், முள் எடுக்கவும், தோதுவான வகையில் வைத்திருப்பான். இடுப்பின்,வெள்ளி அரைநாண் கொடியில் ஒரு முள் வாங்கியும், சாவிகளுடன் எப்போதும் தொங்கும்..முள்ளை எடுத்து விட்டு, அந்த இடத்தில் உப்புத்தூளை வைத்து நன்றாக அழுத்தி அடைப்பான்.அப்புறம் பீடியைப் பற்றவைத்து உற்சாகமாய் ஒரு இழுப்பு வலித்து விட்டு, அதில் கனியும் கங்கை, உப்பை யொட்டி, பட்டும் படாமலும் காட்டுவான்.முதலில் ஒன்றும் தெரியாது,அரை நிமிஷத்தில், அவன் முள்ளுக்காக கிளர்ந்த இடத்தில் சுரீரென்று சூடு தைத்து, செய்தி மூளையில் உணரப்பட்டு ஸ்ஸ்ஸ்என்று காலை, இழுத்துக் கொள்வோம்.இப்ப முள்ளுமுனை எதுவும் இருந்தாலும் செமிச்சுப் போயிரும் என்பான், பாலன்.இந்த வேடிக்கைகள் தவிர்த்தால், சிகை திருத்தகத்தில் “சிந்தித்துக் கொண்டிருப்பதைத் தவிர ஒன்றும் செய்ய முடியாது.சில சமயம் ஒரே நினைவுகள் சொல்லி வைத்தாற்போல் வரும். பிரபல எழுத்தாளரும், தோழியுமான இந்துமதி, ஒரு சமயம் சொன்னார், ‘பெண்களுக்கு சில அனுபவங்கள் வாய்ப்பதில்லை, அதில் ஒன்று இந்த மாதிரி சிகையலங்காரக் கடை அனுபவம் என்று. அவள் சொன்ன நாளிலிருந்து, சுமார் முப்பத்திஐந்து வருடமாக எப்போது சலூனுக்குப் போனாலும் இந்துமதிதன் அழகிய கண்களுடன், நினைவுக்கு வரத் தவறியதே இல்லை.

ஒரு திடீர் மழைச் சமயம்,சாலையில் நடந்து கொண்டிருந்தவர்கள், ஒரு சிறிய பெட்டிக்கடைக்கு முன்பிருந்த ஓலைச் சாய்ப்பில் அவசர அவசரமாக ஒதுங்கினோம்.என்னருகே ஒருவன், வர்ணம் சொட்டும் ஒரு அரையங்குல ப்ரஷ்ஷுடன் நின்றான்.எதிர்த்த சுவரில் அவன் பாதியில் விட்டு வந்திருந்த தேர்தல் (வாக்குறுதி)வாசகங்களை மழை கரைத்துக் கொண்டிருந்தது..அவன் அமைதியாயொரு சிகரெட் வாங்கிப் பற்ற வைத்தான். கொஞ்சமே புகைத்திருப்பான், சாய்ப்பிலிருந்து சொட்டிய மழைத்துளி, சிகரெட்டில் பட்டு முழுதும் வீணானது. அர்த்த புஷ்டியுடன் இருவரும் பார்த்துக் கொண்டோம் ஒன்றும் பேசிக்கொளவில்லை,

வர்ணத் தொலைக் காட்சி வந்த புதிது. ராமானந்த் சாகரின் மெகா சீரியலான ‘ராமாயணம்ஒளி பரப்பாகிக் கொண்டிருந்தது.எங்கள் இடைகால் கிராமத்தையெல்லாம், அப்போது டி.வி எட்டிக்கூடப் பார்க்கவில்லை.மதுரையில் நண்பன் வீட்டில் விருந்துக்கு ஒதுங்கிய நேரத்தில் பார்த்துக் கொண்டிருந்தேன். அன்றையக் கதைப் பகுதியில் சீதை அசோகவனத்திலிருக்கிறாள், மழையைப் பார்த்தபடி.விருந்து வந்தால் என்ன செய்வானோ ராமன் என்று கம்பன் சொல்வதை நினைத்துக் கொண்டிருக்கிறாளோ என்னவோ. ராமன்,சபரியின் பர்ணசாலையில், லக்‌ஷ்மணன், சுக்ரீவன், அனுமன் புடை சூழ, ஆனால் அமைதியாய்ப் பெய்யும் மழையை, சோகமாய்ப் பார்த்தபடி. அடுத்த காட்சி, பரதன் நந்தியம்பதி அரண்மனையில்; அவனும் மழையைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.....இப்படிப் பல காட்சிகள். அந்த எபிஸோட் முழுக்க ஒரு வசனம் கூடக் கிடையாது...எல்லாமே, எல்லாருமே மழையைப் பார்த்து ஏதோ சிந்தனை வயப்பட்ட படியே, சோகமாய் இருக்கிற மாதிரி அற்புதமாய் அமைந்திருந்தது. வள்ளுவரும் ஒரு மழைநாளில்த்தான் சிந்தை பறி கொடுத்து வான் சிறப்பு பற்றி ஒரு அதிகாரமே எழுதியிருப்பாரோ...யார் கண்டது, எடுப்பதூஉம் கொடுப்பதூஉம் எல்லாம் மழையல்லவா.

7 comments:

ராம்ஜி_யாஹூ said...

இரு வேறு நிகழ்வுகளும் இடங்களும் மிக மிக அருமை சார்.

மூன்று மணி நேர திரைப்படங்கள் தூண்டும் உணர்ச்சியை விட கூடுதலாகவே உங்களின் முப்பது வரிகள் தூண்டி விடுகிறது.

எதற்கு நான் கொரிய திரைப்படங்களும், ஈரான் திரைப்படங்களும், பிரெஞ்சு இல்கக்கியங்களும் வங்காள கவிதைகளும் படிக்க வேண்டும்.

எங்கள் அடுத்த வார்டில் இருக்கும் பதிவரே எனக்கு கம்பன், பாரதி, வள்ளுவன் எல்லாம் கலந்து அளிக்கும் போது. நீங்கள் நெல்லை என்பதால் மட்டும் இந்த புகழுரை இல்லை.

மழையை பார்க்கும் ஒவ்வொருவரின் சிந்தனையும் ஒரு விதம், சலூனில் காத்து இருக்கும் ஒவ்வொருவரின் மனத்திலும் பல வகையான சிந்தனை ஓட்டம்.

பொதுவாகவே நாம் பெரும்பாலும் சலூநிர்க்கு தனியாகவே செல்கிறோம், நண்பர்களாய் நான் போன அனுபவம் இல்லை.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

எழுத்தாளர் இந்துமதி உங்கள் தோழியா? அவங்க எப்படி இருக்காங்க சார், விஜய் டிவி இல பார்த்து ரொம்ப வருத்தப்பட்டேன், ஒரு வெகுளியான மனம் பட்ட பாட்டை.
அனுபவங்கள் ரசிக்கும் படி இருந்தது. அதிலும் சலூன் கடை அனுபவம் ஸ்பெஷல் .

உயிரோடை said...

எப்போதோ பார்த்து ம‌ன‌தோடு இறுக்கிக் கொண்ட‌ நினைவுக‌ளை க‌ட‌ல் முக‌ர்ந்து பின் கொடுக்கும் மேக‌ம் போல‌வே சொல்லி இருக்கீங்க‌. ”எடுப்பதூஉம் கொடுப்பதூஉம்” இது உங்க‌ ப‌கிர்விற்கும் பொருந்தும்

Anonymous said...

to display only post titles as like s.ramakrishnan having in his blog follow d steps in this site http://www.anshuldudeja.com/2009/03/show-only-post-title-in-blogger-label.html

Thursday, June 10, 2010 6:10:12 AM GMT+04:00


to have label in drop down format follow steps in http://jacqsbloggertips.blogspot.com/2010/02/how-to-create-dropdown-labels-menu-in.html

June 10, 2010 7:41 AM

இனியாள் said...

அருமையான பதிவு, மழை பற்றி எழுதாத ஒரு கவிஞன் கூட இருக்க மாட்டான்.
இந்துமதி அவர்கள் சிந்தித்ததை போல் நானும் சிந்தித்ததுண்டு எனினும் அழகு நிலையங்கள் வந்து விட்ட இந்த காலத்தில் பெண்களுக்கும் இந்த சலுகை கிடைக்க தொடங்கி இருப்பது மகிழ்ச்சியே. ஆனால் எத்தனை பெண்கள் இப்படி சிந்திக்க அழகு நிலையம் போவார்கள்.

Anonymous said...

mr. kalapriya,

Important subject: just show only post titles instead of showing both post title and its content.

Bloggers don't know the mentality of readers. They are showing both post title and its content. It must be avoided. Surely. Bloggers must show only post titles as like s.ramakrishnan has in his blog.

Please not these 3 things:

1. மக்களுக்கு பொறுமை கிடையாது. உங்கள் பிளாகின் முதல் பக்கத்தில் உள்ள போஸ்ட்டுகளை மட்டுமே பார்த்து விட்டு அவர்கள் வெளியேறி விடுவார்கள். அதிலும் 2 பிரச்சனை உண்டு. பலருடைய கட்டுரைகள் மிகவும் நீளமாக இருக்கின்றன. அதனால் முதல் பக்கத்தில் பத்து போஸ்ட்டுகள் மட்டுமே இருந்தால் கூட ஒருவித அலுப்பை அவை ஏற்படுத்திவிடும். Scroll barஐ கீழே fast ஆக‌ இழுக்கும் போது முதல் பக்கத்தில் உள்ள கட்டுரைகளின் தலைப்புகளைக் கூட தவறிவிடுவார்கள்.

2. பல பொது மக்களுக்கு ஒரு blogஐ எப்படி use செய்வது என்பதே கூட தெரியாது. முதல் பக்கத்திலேயே Blog archive sideல் உள்ளது. அதை திறந்து பார்த்தால் இதுவரை எழுதப்பட்டுள்ள அத்தனை கட்டுரை தலைப்புகளையும் பார்க்க முடியும். ஆனால் இது கூட பலருக்கும் தெரியாது என்பது உண்மை.

3. மருதன், முகில், பா.ராகவன் போன்ற சில கிழக்கு எழுத்தாளர்கள் கிட்னி பிரச்சனையால் அவதிப்ப‌டும் முத்துக்குமார் என்பவருக்கு உதவுமாறு ஒரு கட்டுரை எழுதினார்கள். அவர்கள் புதிதாக அடுத்த கட்டுரைகளை எழுதிய போது அந்த உதவி தேவை என்ற கட்டுரை கீழே இறங்கிப் போய் விட்டது அல்லது அடுத்த பக்கத்திற்கு போய் விட்டது. அதனால் அந்த முக்கிய கட்டுரை புதிய வாசகர்கள் கண்ணில் உடனடியாக படாமல் போய்விட்டது. எந்த வாசகரும் post titleகளுக்காக blog archiveஐ பொறுமையாக திறந்து பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை சொல்ல வேண்டியதில்லை. மேலும் next page என்பதை திறந்து திறந்து பார்ப்பார்கள் என்று சொல்வதும் முடியாது. அவர்களுக்கு பொறுமையும் இல்லை. நேரமும் இல்லை. இந்த கிழக்கு எழுத்தாளர்கள் மட்டும் போஸ்ட் டைட்டில்கள் மட்டும் தெரியுமாறு செட் செய்திருந்தால் அந்த முக்கிய கட்டுரை இன்னும் பலர் கண்ணில் எளிதாய் பட்டிருக்கும். இன்னும் நிறைய பேரின் உதவி கிடைத்திருக்கும்.

So, Please set your blog to show just post titles only instead of showing both title and its content as in my blog http://blufflink.blogspot.com/

A blogger followed my tips and she has changed her blog to show only post title. Watche her blog http://livingsmile.blogspot.com/

For showing only post title instead of showing both title and its content visit and follow steps mentioned here

http://www.anshuldudeja.com/2009/03/show-only-post-title-in-blogger-label.html

(If you decide to show only post title in your blog after changing it so set you blog to show 50 post titles per page. It will enable the reader to have very quick glance of your posts.)

இனியாள் said...

Mr. d the thing which u suggested is not working in blogger.