Saturday, January 14, 2012

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்


உங்களூரு..
அங்கேயும் அணில்கள்
குருவிகள் காகங்கள்
பகலில் கரைபவை
இன்னும் இருக்கிறது போல

உன் தெருவில்   
ஏதோ வியாபாரி
என்னவோ விற்கிறான்
பாஷை வேறானாலும்
ஒரு பழகிய நைந்த குரல்
காதில் விழுகிறது.

உலகச் செய்தி ஓசை
உன் தொலைக்காட்சி
ஒலியளவைக் குறைக்கவில்லையோ

குக்கர் சத்தம் கேட்டு
நீங்கியதால் 
நின்றதோ
துணிதுவைக்கும் சத்தம்

என்னையோ உன்னையோ
தப்பிய அழைப்பாய்
யாரோ இடையே கூப்பிட்டு
அது வேறு பதற்றம்


எல்லாம் புலனுக்கெட்டுகிறது
உன் அலைபேசி
உரையாடலைத் தவிர

இதற்காகக் குழந்தைகள்
விளையாட்டைச் சத்தமிட்டு
நிறுத்தியிருக்க
வேண்டாம் நானுமே.
                        -கலாப்ரியா
.



3 comments:

ராஜா சந்திரசேகர் said...

ஆழமான வரிகள்.அழகான கவிதை.

ந.பெரியசாமி said...

இன்னமும் தொலைக்காட்சியின் ஒலியை குறைக்க மறந்து குழந்தைகளை அதட்டி அடக்கிக்கொண்டே இருக்கிறோம். சலனப்படுத்தும் கவிதை

சித்திரவீதிக்காரன் said...

அற்புதமான கவிதை. திக்கெட்டும் தமிழ் பரவட்டும்.

Visitors