Thursday, May 19, 2011

வசந்தத்தில் ஓர் நாள்......

பாந்தவ்யமான மேலைக்காற்று

வீசுகிற வசந்தத்தின் இந்த

அடிநாளில்

கோடை நிலவென

தீர்க்கமான ப்ரியங்களுடன்

எங்களுக்காய் உங்கள் மனம்

விகசிக்கட்டும்.....

எனக்கு

எவ்வளவும் பிரியமானவர்களே

எங்கள் மணவாசல்

வாருங்கள்

வாழ்த்துங்கள்

(19.05.1978)

இந்தக் கவிதையை எங்கள் திருமண அழைப்பிதழில் எழுதியிருந்தேன். இன்று இரண்டு விஷயங்களுக்காக இது நினைவு வந்தது.நண்பர் சி.மோகனின் மகள் மிதிலாவுக்கு வருகிற 19.06.2011-ல் திருமணம். அந்த அழைப்பிதழில் அவர் ஒரு அழகான கவிதை எழுதியிருக்கிறார். இன்னொன்று இன்றுதான்(19.05.2011) எங்கள் திருமண நாள்.



9 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

நேற்றின் சுகந்தங்களும் நாளையின் வர்ணங்களும் நிரம்பிய ஆனந்தத்தின் மலர்கள் என்றும் உங்கள் இருவரின் கையெட்டும் தொலைவிலேயே மலரட்டும் திருமதி&திரு.கலாப்ரியா.

உங்களின் நண்பர் திரு.சி.மோகனின் கவிதையும் மனதில் வண்டல் போலத் தங்கி நின்றது. அவரின் பரிவின் மொழி சொன்ன கவிதை போல் அவரது மகளுக்கு மீனாட்சி கிளியைத் தரட்டும்.

மகள் மிதிலாவுக்கும் அவரின் வாழ்க்கைத் துணைக்கும் கூட முன்குறித்த திருமண வாழ்த்துக்கள்.

rvelkannan said...

வணக்கத்துடன் நன்றியும்
வாழ்த்துகள்(மிதிலாவிற்கு)

rajasundararajan said...

இன்னும் பல்லாண்டு கோடி வாழ்வீர்காள் கூடி; மிதிலாவும் தன் துணையோடு பல செல்வங்கள் தேடி!

ராம்ஜி_யாஹூ said...

நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள், வணக்கங்கள், நன்றிகள்

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துகள் ஐயா.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

Anonymous said...

அய்யா,
வுங்கள் "நினைவின் தாழ்வாரங்கள்",ஒரே மூச்சில் படித்தேன்.அருமை.படித்து கீழே வைத்தபின் நம்முடன் அந்த எழுத்து கொஞ்ச நேரமாவது இருக்க வேண்டும்.இது கொஞ்ச நாளாவது இருக்கும் என தோன்றுகிறது.
எவ்வளவு சொல்லவேண்டும்,எங்கே நிறுத்த வேண்டும் என்பதில்தான் எழுத்தின் வெற்றி.நண்பன் அடிபட்டுகொண்டிருக்க,சய்கிளில் விரைந்த இடம் போல.பாதி இடங்களில்,நினைக்கிறேன்,மறந்து விட்டது என்பதில் இருக்கும் வுண்மை ,அழகு சேர்க்கிறது.நினைவில் கிடக்கிற சினிமா,வாழ்வின் சரிவுகள்,மரணங்கள் ,வுங்கள் சம்பளத்தில் சுகப்படாமல் போய்விட்ட அப்பா,அவர் இறப்பு குறித்த வுள்ளுணர்வு,நம் வாழ்வில் ரொம்ப பிரியமாக இருப்பவர்களிடம், எரிந்து விழுந்துகொண்டே ,குற்ற வுணர்விலும்,தவிர்க்க முடியாமலும் [அம்மா]இருப்பதன் பதிவுகள் அருமை.ஏற்ற இறக்கங்கள் சேர்ந்து விடாமல் இயல்பாய் சொல்லி சென்ற, "நினைவின் தாழ்வாரங்கள் ",தங்களை பற்றியும் பதிய வேண்டும் என எழுதுபவர்களை தூண்டும்.
இந்திரா பாலசுப்ரமணியன்.

உயிரோடை said...

வாழ்த்துகள் சார்

Anonymous said...

https://docs.google.com/document/d/167ezQpRodFd6Mlsf6u5GqC3w56Sl6_DUJzoRGPVuNJE/edit?hl=en_US&pli=1

today, i have made some modifications in adding a label feed in google reader ....see it.d.