Thursday, April 21, 2011

எஸ்,ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள்


இந்தியாவின் மிக முக்கிய விருதான தாகூர் இலக்கிய விருது எஸ்.ராமகிருஷ்ணனுக்குக் கிடைத்துள்ளது, இந்த விருதை கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம் சாகித்ய அகாதமியோடு இணைந்து ஏற்படுத்தியுள்ளது. முதன்முறையாக தமிழுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது,.

இந்த விருது குறித்த அறிவிப்பு

**

தாகூர் இலக்கிய விருது

மகாகவி தாகூரின் 150வது ஆண்டினை ஒட்டி இந்திய இலக்கியங்களைக் கௌரவிக்கும் விதமாக கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம் சாகித்ய அகாதமியோடு இணைந்து தாகூர் இலக்கிய விருது (Tagore Literature Award) ஒன்றினை ஏற்படுத்தியுள்ளது,

91 ஆயிரம் ரொக்கப்பணமும் தாகூர் உருவச்சிலையும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது இவ்விருது.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய மொழிகளில் எட்டு தேர்வு செய்யப்பட்டு அதில் உள்ள மிகச்சிறந்த இலக்கியவாதியின் ஒரு நூலிற்கு தாகூர் இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது,

இதற்கானத் தேர்வுப் பணியை மேற்கொள்வது டெல்லியில் உள்ள சாகித்ய அகாதமி நிறுவனம், இந்த ஆண்டு இந்திய அளவில் எட்டு இலக்கியவாதிகள் இவ்விருதினைப் பெறுகிறார்கள்

2010ம் ஆண்டிற்கான தாகூர் இலக்கிய விருது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய யாமம் நாவலுக்கு வழங்கப்படுகிறது.

யாமம் நாவல் சென்னையின் முந்நூறு ஆண்டுகாலச் சரித்திரத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட நவீன நாவல், இந்த நாவல் முன்னதாக தமிழின் சிறந்த நாவலாகத் தேர்வு செய்யப்பட்டு கனடாவின் இயல்விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது

பெருமைக்குரிய இந்திய விருதான தாகூர் இலக்கியவிருது தமிழுக்கு முதன்முறையாக வழங்கப்படுகிறது, அவ்வகையில் எஸ். ராமகிருஷணன் மிகுந்த பெருமையடைகிறார்.

விருதுவழங்கும் நிகழ்ச்சி மும்பையில் மேமாதம் 5ம் தேதி மாலை மேற்கு தாதரில் உள்ள ரபீந்திர நாட்டிய மந்திர் வளாகத்தில் நடைபெற்ற உள்ளது. இதில் இந்தியாவின் முக்கிய இலக்கியவாதிகள் மற்றும் கொரிய அரசின் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.


•••

நவீன தமிழின் பன்முக வியக்தி கொண்ட மிக முக்கியமான எழுத்தாளர்களில் எஸ்.ராமகிருஷ்ணன் ஒருவர். அவருக்கு தாகூர் விருது கிடைத்தமைக்கு என் மன்ப்பூர்வமான வாழ்த்துக்கள்.தெரிவு செய்தவர்களுக்கு பாராட்டுக்கள்.



-கலாப்ரியா

4 comments:

ராம்ஜி_யாஹூ said...

மகிழ்வான செய்தி.
எஸ் ரா அடிக்கடி தாகூரையும் உங்களையும் தொடர்பு படுத்தி எழுதுவார்.

nellai அண்ணாச்சி said...

வாழ்த்துக்கள்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

தமிழின் நவீன எழுத்துக்களுக்கு மிக முக்கியமான ஸ்தானத்தில் இருக்கும் எஸ்.ராமகிருஷ்ணனும் ஒருவர்.அவரின் சிறப்பு தொன்மத்துக்கும் நவீனத்துக்குமான அவரின் சிந்தனையும் மொழியும் தான்.

உரிய நேரத்தில் உரிய கலைஞனுக்கு வழங்கப்படும் விருது கலைஞனையும் கௌரவித்து தன்னையும் கௌரவித்துக்கொள்கிறது.

அளவற்ற மகிழ்ச்சி ராமகிருஷ்ணன்.

Anonymous said...

delete after seeing

chanakyar about women
https://docs.google.com/document/d/1idvKf-KoXUc5OuUpWJ_5olkFQnptteG3aUv6CjJBAZo/edit?hl=en_US

Visitors