Wednesday, May 5, 2010

சுஜாதா விருதுகள்

உயிர்மை பதிப்பகமும், சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து அறிவித்திருந்த 2010க்கான சுஜாதா விருதுகள் சுஜாதாவின் பிறந்த தினமான மே 3 ஆம் தேதி மாலை சென்னை தேவநேய பாவாணர் அரங்கில் வழங்கப்பட்டன. இந்த ஆண்டிற்கான சுஜாதா விருதினை கலாப்ரியா (உரைநடை), ஜெயந்தன் (சிறுகதை), ரமேஷ்-பிரேதன் (கவிதை), மா.காமுத்துரை (நாவல்), டாக்டர்.ஜி.சிவராமன் (சிற்றிதழ்), லேகா (இணையம்) ஆகியோர் பெற்றனர். இந்த பரிசிற்கு நடுவர்களாக பிரபஞ்சன், இந்திரா பார்த்தசாரதி, ஞானக்கூத்தன், வாஸந்தி, திலீப்குமார், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் இருந்தனர். ஒவ்வொரு விருதும் தலா 10,000ரூபாயும், பாராட்டுப் பத்திரமும் கொண்டது.

நிகழ்ச்சியில் மனுஷ்ய புத்திரன், திருமதி சுஜாதா ரங்கராஜன், நடிகர் ரா.பார்த்திபன், இயக்குனர் பாலுமகேந்திரா, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், சாரு நிவேதிதா, தமிழச்சி தங்கபாண்டியன், இந்திரா பார்த்தசாரதி, ஞானக்கூத்தன், வாஸந்தி, ஏ.நடராசன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

விழாவிற்கு 400க்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகை தந்திருந்தனர்.

விழாப் புகைப்படங்கள்

சுஜாதா உரைநடை விருதை கலாப்ரியாவிற்கு அவருடைய நினைவின் தாழ்வாரங்கள் நூலிற்காக இந்திரா பார்த்தசாரதி வழங்கிறார், அருகில் திருமதி.சுஜாதா ரங்கராஜன் மற்றும் மனுஷ்யபுத்திரன்

2 comments:

Unknown said...

வாழ்த்துக்கள் ஐயா.

butterfly Surya said...

வாழ்த்துகள் சார். விழாவில் தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.