Friday, January 7, 2011

இந்த ஆண்டு வெளிவந்திருப்பவை...

குங்குமம் இதழில் வெளிவந்த 46 கட்டுரைகள் ‘மருது’வின் சிறப்பான, ஈடுபாடு மிக்கஓவியஙளுடன், ’அந்திமழை’பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. விலை.ரூ135/- சென்னை புத்தக கண்காட்சியில் ‘அகரம் ‘/அன்னம் ஸ்டாலில் கிடைக்கும்.
கலாப்ரியா கவிதைகள்
விலை ரூ.180/-

புதுக் கவிதை வரலாற்றில் மட்டுமல்ல, நவீன தமிழ் இலக்கிய வரலாற்றுப் பக்கங்களிலும் கலாப்ரியா ஒரு தவிர்க்க முடியாத அத்தியாயம். ஒரு வகையில் தீரா நதி. ஒரு வகையில் நகல் செய்ய முடியாத ஒரு வெளிச்சம். பின்தொடரமட்டுமே முடியும். எல்லாத் தீவிரமான படைப்புக்களும் கோருகின்ற தீவிரமான பின்தொடரல் அது.

வண்ணதாசன்

நவீன தமிழ்க்கவிதையின் ஒரு அசல் முகம் கலாப்ரியா. மிக மிக இயல்பான நிகழ்வுகளை சராசரியான எளிய மொழியில் சொல்வது மட்டுமல்ல. அதன் அந்தரங்கத்தில் அணுத்தெறிப்பான ஓர் அவலம் வெடித்துத் திறப்பதிலும் கலாப்ரியாவின் கலை நுட்பமாகிறது.

கவிஞர் சிற்பி. பாலசுப்ரமணியம்




சந்தியா பதிப்பகம் வெளியீடு.கடை எண்64.65 புத்தக கண்காட்சி, சென்னை.






(முழுத்தொகுப்பு)


தீர்க்க ரேகைகள்....


”இந்த நூற்றாண்டில் நாம் யாருடனும் சண்டையிட முடியாது...நீங்கள் தெருவின் இந்த முனையில் ஒருவருடன் சண்டையிட்டால்..அடுத்த முனையில் அவரின் உதவி நமக்கு தேவைப்படும்...”-அசோகமித்திரன் “ஒற்றன்” நாவலில்.

அசோகமித்திரன், நம் காலத்தின் மிகச் சிறந்த கலைஞன். அவரது பல்வேறான இலக்கியச் சாதனைகளுக்குப் பின்னரும், விருதுக்கோ, அங்கீகாரத்திற்கோ எந்தவிதமான தன் முனைப்பும் காட்டாதவர். தீர்க்கமான் அவரது தமிழ் உரைநடையின் பாதிப்பை நிறையப் பேரிடம் காணமுடியும்.மிக, மிக எளிமையானவர். அவரது தாமோதர ரெட்டி தெரு வீட்டுக்கு டி.நகர் பஸ் நிலையத்தில் இறங்கி,பல முறை சென்றிருக்கிறேன்.அவரது தமக்கையின் உடல் நிலை கருதி பத்து நிமிடம் பேசி விட்டு, “நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள் அங்கே வந்துவிடுகிறேன்” என்று சொல்லுவார். அதே போல் அவரது சைக்கிளில் வந்து விடுவார்.
ஒரு முறை ஒயிட்ஸ் ரோடில் உள்ள ஒரு விடுதிக்கு, மதியத்தில் அப்படி வந்து, மாலை மங்கும் வரை பேசிக் கொண்டிருந்தார். அப்போது வண்ணநிலவனின் கடல்புரத்தில் நாவல். கணையாழியில் தொடராக வந்திருந்த சமயம்.என்னுடன் வந்திருந்த நண்பர் ஒருவர்...வாய்த்துடுக்காக அவரிடம் பேசிக் கொண்டிருந்ததைக் கூட அவர் பொருட்படுத்தவில்லை.அன்றைக்கு பாலகுமாரன், சுப்ரமணிய ராஜு, எம்.சுப்ரமணியன், ஜெயபாரதி என்று ஒரு பெரிய கூட்டமே வந்து,அறை கலகலப்பாக இருந்தது.
அவர் கதைத் தொகுப்பு முதன் முதலாக வந்தபோது வண்ணதாசன் படிக்கத் தந்தார். அதைப் படித்த விருத்தியில், சலனம் என்று ஒருகதை எழுதி கசடதபறவுக்கு அனுப்பினேன். பிரதி கூட வைத்துக் கொள்ளவில்லை.அது பிரசுரமானதும் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன், “இது உங்கள் பாதிப்பில் எழுதியது” என்று. ஒரு இன்லண்ட் லெட்டரின் முழுமைக்கும் தன் வாழ்த்தையும், கதை பற்றி அபிப்ராயமும் எழுதியிருந்தார்.அவர் ஆசிரியராக இருந்த கணையாழியில் அதன் பின் இரண்டு கதைகள் வெளிவந்தன. இதெல்லாம் 1973-74-ல்.அதன் பின்னர் என் மீதான அன்பும் , அக்கறையும் அவரிடம் என்றும் குறைந்ததே இல்லை.எப்போது பேசினாலும் நலம் விசாரிப்பார். என்னைத் தொடர்ந்து படித்து ஊக்குவிப்பார்.
இன்று கூட என் உரை நடையில் அவரின் பாதிப்பு இருப்பதாகவே உணர்கிறேன்.
அவருக்கு’ சாரல்’ விருது தந்திருப்பது ரொம்பவும் உயர்வான விஷயம்.இந்நேரத்தில் அவருக்கு என் மரியாதையயும், பரிசு தந்த நண்பர்களுக்கு சந்தோஷத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.



அன்பிற்குரிய நண்பருக்கு,

வணக்கம்.

நலம் தானே.

நானும், நண்பர் தேனுகாவும், திரு மா.அரங்கநாதன் அவர்களும் ராபர்ட்-ஆரோக்கியம் அறக்கட்டளை வழங்கி வரும் சாரல் இலக்கிய விருதின் நடுவர் குழுவில் தேர்வாளர்களாக இயங்கி வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இந்த ஆண்டின் சாரல் இலக்கிய விருது முதுபெரும் எழுத்தாளர் திரு அசோகமித்திரன்அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

உங்கள் வருகையால் விழா மேலும் சிறக்கும். அவசியம் வருக!

நன்றி!

அன்பாக
ரவிசுப்ரமணியன்

நினைவுச் சிற்பம்


சாரல் விருது வழங்கும் விழாவும்
ஜேடி ஜெர்ரியின் கலம்காரி நூல் வெளியீட்டு விழாவும்



பங்கேற்போர்:
பிரபஞ்சன்
| ஆர். பி. பாஸ்கரன் | எம்பெருமாள் | ச தமிழ்செல்வன் | பாரதிமணி | இயக்குனர் லிங்குசாமி

அன்று இரவு 8 00 மணிக்கு ஜேடி ஜெர்ரியின் கலம்காரி ஆவணப்படம் திரையிடப்படும்.


இடம்: பிலிம் சேம்பர் அரங்கம், சென்னை,

நாள்:9.01.2011 நேரம் மாலை 6 மணி.














Visitors