Tuesday, September 11, 2012

நன்றி: காட்சிப்பிழை திரை செப்.2012



சுந்தரத் தெலுங்கினில்....
அந்த அண்ணனுக்கு இறக்கிற வயசில்லை. வசதிக்கும் எந்தக் குறைவும் கிடையாது.சிறு வயதில் நீலக் குழந்தையாய் இருந்தவராம்.thanl அதனால் ஜாக்கிரதையாக வளர்க்கப்பட்டவர் என்பார்கள். ஆனால் பிற்பாடு எல்லாம் சரியாக ஆகி விட்டது என்றார்கள். பேச்சு சற்றே குழறுவது போல் இருக்கும்.திடீரென சின்ன வயதிலேயே இறந்து விட்டார்.அவரை மயானத்திற்கு எடுத்துச் செல்லும்போது ஆச்சரியமான கூட்டம் வந்தது.வந்தவர்களில் நிறையப்பேர் அவருக்காகவே வந்திருந்தது சிலரின் ’’’’’ ‘வாப்பாறிய பேச்சிலிருந்தும், பெரும்பாலரின் அசாதரண அமைதியில் இருந்தும் தெரிந்தது. பொதுவாக மயானக்கரை போகும் வரைதான் அமைதியாய் இருப்பார்கள்.வெட்டியான் காரியங்களை ஆரம்பித்த பின் ஆளாளுக்கு குழு குழுவாகப் பிரிந்து சகலத்தையும் பற்றிப் பேசிக் கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் தில்லைத்தாண்டவராய சுப்ரமணிய அண்ணன் இறந்த அன்று அவரை எரியூட்டி ஆற்றில் குளித்து கரையேறிய பின்னர் கூட அனைவரிடமும் சோகம் கலந்த அமைதி இருந்தது. ஆற்றில் குளிக்கும்போது மழை பெய்தது.முன் மாலை நேர ஆற்று நீர் சூடாகவும் மழை நீர் குளிராகவும் இருந்த ஒரு அபூர்வக் கணம் அது. அருகில் வண்ணதாசன் குளித்துக்கொண்டிருந்தார்.இருவரும் அர்த்த பூர்வமாகப் பார்த்து அதைப் பகிர்ந்து கொண்ட நினைவு.
தில்லைத்தாண்டவராயசுப்ரமணியனுக்கு அற்புதமான ஞாபகசக்தி. ஒவ்வொரு வருஷமும் தேரோட்டம் என்ன தேதிக்கு வந்தது,பொருட்காட்சி என்று ஆரம்பித்தது என்று மறக்காமல் சொல்லுவார். ஆனி மாசம் ஏதாவது ஒரு திதிப்படித்தான் ஆனித்திருவிழா கொடியேறி நடக்கும். ஆனால் ஆங்கில வருடப்படி என்றைக்கு வந்தது என்று சரியாய்ச் சொல்லுவார். அக்டோபர் மாத வாக்கிலோ என்னவோ தேரடியில் நடக்கும் ராமலிங்க வள்ளலார் ஒரு வார விழாவின் இறுதிநாள்க் கச்சேரிக்கு, நட்சத்திரப் பாடகராக எந்த வருடம்  யார் வந்தது என்று சரியாகச் சொல்லுவார்.வீட்டில் ரேடியோ கிராம் உண்டு. நிறைய ரிக்கார்டுகளும் இருக்கும். பாடல்கள் பற்றியும் பாடியவர்கள் பற்றியும் எல்லா விஷயங்களும் அத்துப்படி.அவரிடம் நான் இரண்டு முறை மாட்டிக் கொண்டேன்.பொதுவாக தெருவில் சினிமா சந்தேகங்களை என்னிடம் கேட்பார்கள்.புதையல் படத்திற்கு இசை யார் என்று ஒருநாள் ‘சபைக்கு சந்தேகம் வந்து விட்டது. என்னை சபைக்கு அழைத்து, கேட்டார்கள் நண்பர்கள். நான் தயங்காமல் ‘சுதர்சனம்என்று சொன்னேன்.விஸ்வநாதன் ராமமூர்த்தி இல்லையா’, என்ற மணி அண்ணனின் குரல் அமிழ்ந்தே போனது. ஏ.வி.எம் படத்திற்கு வேறு யார் இருக்க முடியும் என்று நான் வாதிட்டதில். இதைப் பேசிய கொஞ்ச நாளிலேயே புதையல் படம் சென்ட்ரல் டாக்கீசில் போட்டார்கள்.கூட்டத்தோடு போய் டைட்டிலில் சங்கீதம்: விஸ்வனாதன் – ராமமூர்த்தி என்று போட்டதும், முதுகிலும்,பொடதியிலும் சரமாரியாய் செல்லஅடி விழுந்தது.பாருல கண்ணை நல்லா அவிச்சுகிட்டு பாருலேஎன்று. அதே போல் மகாதேவி படத்தில் வரும்மானம் ஒன்றே பெரிதெனக் கொண்டு வாழ்வது நமது சமுதாயம்..என்ற பாட்டு யார் பாடியது என்று சந்தேகம். நான் ஜமுனாராணி என்று அடித்துச் சொன்னேன்.அன்றும் மணி அண்ணன் இருந்தார். அவர் டி.எஸ்.பகவதி என்றார்.காமுகர் நெஞ்சில் நீதியில்லை..பாடல்தான் ஜமுனாராணி என்றார். நான் சற்று பம்மினாலும் என் பக்கத்திலும் சிலர் பேசினார்கள்.ஆமா ஜமுனா ராணி குரல் மாதிரிதான் இருக்கு என்றார்கள்.
மறுநாள் காலையில், வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.முன் தார்சாலில்,வாங்க தம்பி வாங்க என்று ஏக உபசாரமாய் சத்தம் கேட்ட்து. நான் யாராய் இருக்கும் என்று யோசிக்கும் முன்னரே என் அப்பாவே அடுப்படிக்கு வந்து,டேய், ஜமீந்தார் ரத்னசபாபதி பையன்  உன்னைத் தேடிட்டு வந்திருக்கானே என்னெடா.. என்றார். என்னமும் வம்பிழுத்து வச்சிருக்கியா என்ற தொனி அதில் இருந்தது.நான் பாதிச் சாப்பாட்டிலேயே எழுந்து போனேன். மணி அண்ணன் கையில் ஒரு ‘கொலம்பியாஇசைத் தட்டுடன் உட்கார்ந்து பெரிய அண்ணனுடன் பேசிக் கொண்டிருந்தார்.வே, இந்தா பாரும் இந்த மகாதேவி ரிக்கார்டிலயே போட்டிருக்கு, ம்யூசிக் விஸ்வனாதன் ராம மூர்த்தி, பின்னணி டி.எஸ். பகவதி என்று ரிக்கார்டைக் காண்பித்தார்.வீட்டில் எல்லோரும் வேடிக்கை பார்த்தார்கள்.என்னவோ போலிருந்தது. இந்தப் பாட்டை போட்டுக் கேட்கலாமா அண்ணன், என்று ஏதோ கேட்டு வைத்தேன். மத்தியானம் வாருமே வீட்டுக்கு என்று சொன்னார்.போனேன்.நிறைய கலெக்‌ஷன் வைத்திருந்தார்.பாடல்களைக் கேட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருந்தார்.
“ வேய், விட்டலாச்சார்யா ஒரு சமூகப்படம் எடுத்திருக்காரு தெரியுமா உமக்கு, என்றார். ஆமா, பெண்குலத்தின் பொன் விளக்கு, ஆனால் பார்த்ததில்லைஎன்றேன். அந்த அண்ணனுக்கு ரொம்ப மகிழ்ச்சி. சொந்த ஊரே சொர்க்க பூமி, திருட்டு ராமன், சுமங்கலி, தெய்வபலம் என்று தெலுங்கு டப்பிங் படங்கள், இந்தி டப்பிங் படங்கள், எல்லாம் பற்றி உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார்.கூச்சத்துடன் கேட்டுக் கொண்டிருந்தேன்.ஸ்ரீ ராம பக்த ஹனுமான் ரிக்கார்டு ஒன்று வைத்திருந்தார்.பாடு பாடு பாடு குயில் போல அன்புப் பேரைப் பாடு, பாடு ஸ்ரீராம் எனவே....சுசிலாவின் அழகான பாடலைப் போட்டார்.இசை - விஜய பாஸ்கர். பின்னால் எஸ்.பி.முத்துராமன் பஞ்சு அருனாசலம்,ஜெய்சங்கர் காம்பினேஷனில் வந்த பல பாடல்களுக்கு இசை அமைத்திருந்தார். நல்ல பாடல்கள். அப்புறம்தான் தெரிந்தது, அவர் தெலுங்கில் பிரபலமானவரென்று. மணி அண்ணன இது சம்பூர்ண ராமாயணத்தை விட நல்லாருக்கும் என்றார்.சரிதானே என்று தோன்றியது.ஆனால் சம்பூர்ண ராமாயணத்தின் பிரம்மாண்டம் வேறுதான் என்று சொன்னார்.வே, வீரத்திலகம் பார்த்தீரா,” என்றார்.ஆமா பார்த்தேனே என்றேன். குருவுனி மிஞ்சின சிஷ்யலுஎன்று தெலுங்கில் பிரமாதமாக ஓடியதின் டப்பிங்தான் வீரத்திலகம். விட்டலாச்சார்யா படம்.காந்தாராவ், கிருஷ்ண குமாரி நடித்தது.கிருஷ்ணகுமாரி சௌகார்ஜானகியின் தங்கை.தெலுங்கில் அப்போது பிரபலமான நடிகை.வீரத்திலகம் படத்தில் காந்தாராவின் வாள்ச் சண்டைக் காட்சிகள் பிரமாதமாய் இருக்கும். எம்.ஜி.ஆர் அப்போது வாளை கீழே வைத்துவிட்டு சமூகப் படங்களில், திருடாதே, தாய் சொல்லைத் தட்டாதே, பணத்தோட்டம், என்று “டிஷ்யூம், டிஷ்யூம்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.(திருடாதே படத்தில்தான் டிஷ்யூம்..டிஷ்யூம்...என்று சண்டைக்காட்சிக்கு பின்னணி இசை தமிழில் வந்தது. அதற்கு முன்னால், டொக்..டொக்.. என்று சிரட்டையை தட்டுவது போலத்தான் ஒலியமைப்பு இருந்த்து.) அதனால் வீரத்திலகத்தை மிகவும் ரசித்தார்கள். எம்.ஜி.ஆரை விட பிரமாதமாக்ச் சண்டை போடுகிறாரே என்று பேசிக் கொண்டதை வாத்தியார் ரசிகர்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டே ஜீரணிக்க வேண்டியதிருந்தது.. காந்தாராவ் பழைய நடிகர்தான், அவர் படங்கள் நிறைய டப்பிங் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. இது ஹிட்டாகி திருநெல்வேலி ரத்னா தியேட்டரில் நான்கு வாரம் ஓடியது.
இதன் வெற்றியைப் பார்த்த பின் விட்டலாச்சார்யா தனது முந்தைய படமான ‘மதன காமராஜன் கதையை விஜய குமாரன் என்ற பெயரில்( வீர விஜயன் என்றுமிருக்கலாம்) டப் செய்து வெளியிட்ட நினைவு. அதுவும் நன்றாக ஓடியது.டப்பிங் படங்கள் விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் தரும். ஆனால் “க்ளிக்ஆக வேண்டும்.சிலசமயம் அதீத நம்பிக்கையுடன், சிலர் ‘பைலிங்குவலாகதயாரிப்பார்கள். சமயத்தில் ஓடும். பாதாளபைரவி, மாயாபஜார், அஞ்சலி தேவியின் கண்வனே கண்கண்ட தெய்வம், மணாளனே மங்கையின் பாக்கியம், எல்லாம் நன்றாக ஓடியது. சில சமயம் ஓடாது. ராஜ மகுடம்என்று ஒரு படம். பேசும் படம் பத்திரிக்கையில் விளம்பரமெல்லாம் அடிக்கடி வந்தது. ஆனால் ஓடவில்லை. அதே சமயத்தில் ‘ ராஜ சேவைஎன்று ஒரு டப்பிங் படம் என்.டி.ராமாரவ் நடித்தது. நன்றாக ஓடியது. நான் அதை மூன்று முறை பார்த்தேன், ஒரு முறை என் அண்ணனுடன், அப்புறம் அப்பாவுடன், அப்புறம் மொத்தக் குடும்பத்துடன்.பாப்புலர் தியேட்டரில் அப்பாவுக்கு எப்போதுமே ஃப்ரீதான்.
நாகேஸ்வர்ராவின் அன்னபூர்னா பிகசர்ஸ் படங்கள் பிரபலம். “எங்கள் வீட்டு மகாலட்சுமி” 50 நாள் வரை ஓடியது. அதைத் தொடர்ந்து அவர்து மஞ்சள் மகிமைபடமும் நன்றாக ஓடியது( இரண்டும் 1959-).அடுத்து வந்த தூய உள்ளம் ( 1961) சுமாராகப் போயிற்று. நாக பஞ்சமி என்று ஒரு டப்பிங் படம் அது நன்றாக ஓடியது. அதே அச்சலசான கதை, சம்பவங்களுடன் ஏ.வி.எம் படமான நாக தேவதை ( கே. சங்கர் இயக்கம் அல்லது எடிட்டிங்),. ஓடவில்லை. பீமனை மையமாக வைத்து, மகா வீர பீமன் அல்லது சம்பூர்ன மகாபாரதம் என்று ஒரு டப்பிங் படம். அதுவும் மூன்று வாரங்கள் வரை ஓடியது.எம்.ஆர்.ராதா சிசுபாலனாக நடித்திருப்பார். இரண்டாவது வார போஸ்டரில் அவர் படத்தைத்தான் பெரிதாகத் தனியாகப் போட்டிருந்தார்கள். அதில்,கௌரவர்களை அழிப்பதற்கே சகுனி அவர்களுடன் சேர்வதாக கதை ஆரம்பமாகும்.மகாபாரதக் கதையைத் தெளிவாகச் சொல்வதில் தெலுங்குப் படங்கள் நன்றாக இருக்கும்.நர்த்தனசாலா என்று விராட பர்வத்தை மட்டும் சொல்லும் ஒரு படம். சுமாராக இருக்கும். அதற்கு தேசீய விருது கூட கிடைத்தது. ( ராஜாஜிக்கு,  ’சக்கரவத்தி திருமகன்என்று ராமாயணக் கதையை எழுதியதற்கு சாகித்ய அகாடமி கொடுத்தது மாதிரி)
இந்த டப்பிங் அலை கொஞ்சம் ஓய்ந்திருந்தது.விட்டலாச்சார்யா சற்று தளர்ந்திருந்தார் என்று நினைக்கிறேன்.அவரது மகன் பி.வி.ஸ்ரீனிவாசன் சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றினார்.மாய மோதிரம் என்று ஒரு படம். படம் பழைய ரத்ன குமார்தமிழ்ப்படத்தின் ரீமேக் தான்.எம்.ஜிஆர் துப்பாக்கி சூட்டில் அடி பட்டு படுக்கையில் இருந்த போது..வந்தது. காந்தாராவ் கதநாயகன், ‘பாரதிகதாநாயகி. பாரதி எம்.ஜி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை. நாடோடி, சந்திரோதயம், எங்க பாப்பா போன்ற படங்களில் நடித்திருந்தார். பாரதியின் தாராளமான ஆடைக் குறைப்புடன் ஒரு பாடல்க் காட்சி வரும். லவ் இன் டோக்கியோபடத்தில் மொஹம்மத் ரஃபி பாடும் “ஜாப்பான்... லவ் இன் டோக்கியோ.... http://www.youtube.com/watch?v=UNxPGHJr9vk மெட்டில் பெண்ணே பருவ வயதுப் பெண்ணே... என்று ஒரு பாடல், அப்புறம் விஜயலலிதாவின் அதிகத் தாராளமான காதல்க் காட்சி என்று படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. மதுரை தங்கம் தியேட்டரில் நான்கு வாரங்களில் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் வசூல் செய்து ‘ஒரிஜினல்தமிழ்ப்பட சாதனைகளை எல்லாம் முறியடித்தது. டப்பிங் படங்களுக்கு பிரிண்டுகள் குறைவாகவே எடுப்பார்கள். அதனால் இப்படிப் படங்கள் எல்லாம் மதுரையில் ஓடிய பிறகே திருநெல்வேலிக்கு வரும். ஆனால் இதற்கு அடிஷனல் பிரின்ட் எடுத்து திருநெல்வேலியில் வெளியிட்டார்கள். முதல்நாள் அன்று பயங்கரக் கூட்டம். சுப்பு ஃபிலிம்ஸ் வெளியீடு. அதன் மேனேஜர் சொக்கலிங்கத்திடம் அநியாய வெட்கத்துடன் டிக்கெட் கேட்க வேண்டியாதாயிற்று. அவருக்கு, வாயெல்லாம் பல். ஒரே சிரிப்போ சிரிப்பு.ஒங்க நேரம்ய்யா என்று பேசிக் கொண்டோம்”.இங்கேயும் படம் ஓடோ ஒடென்று ஓடியது, பணம் கொட்டோ கொட்டென்று கொட்டியது.
அதற்கப்புறம், கன்ஃபைட் காஞ்சனா’, ’ரிவால்வர் ரீட்டாசீஸன் தொடங்கி விட்டது. விஜயலலிதா, ஜோதி லட்சுமியெல்லாம். வெளுத்து வாங்கினார்கள்.ஒரிஜினல் தமிழ்ப் படங்களை விட இவை நல்ல பொழுதையெல்லாம் படம் பார்த்துக் கழிக்கஉதவின. அவ்வப்போது, ஜி.வி.அய்யரின் “தாயின் கருணைபோல நல்ல கன்னடப் படங்களும் டப் செய்யப் பட்டு வந்தன. தாயின் கருணை கல்யாண் குமார் நடித்தது.ஜி,கே வெங்கடேஷ் இசையில் பாடல்கள் மிக நன்றாயிருக்கும்.பூந்தென்றல் இசைபாட புகழ்ப் பாணர் கவி பாட, சான்றோர்கள் மடி வளர்ந்த தமிழ் வாழ்க..என்ற பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடல் அருமையானது. http://thiraipaadal.com/album.php?ALBID=ALBOLD01220&lang=ta ( அவசியம் கேளுங்கள்)
ஏ.எல் ராகவன் -ஜானகி பாடும் “நேற்று நடந்தது நினைவாகும்....பாடல் அவ்வளவு இனிமையாய் இருக்கும்....”. http://thiraipaadal.com/album.php?ALBID=ALBOLD01217&lang=ta (இதையும் அவசியம்  கேளுங்கள்)

இந்தக் கதையின் அப்பட்டமான தழுவல்தான் சிவாஜி கணேசன் நடித்து பிரமாதமாகப் பேசப்பட்ட ‘தெய்வமகன்படம். ஆனால் எந்த விதமான ‘நன்றியும் தெரிவிக்கப்படவில்லை.
ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் ஏகப்பட்ட தழுவல்கள் டப்பிங் படங்கள் வந்தன. ‘கோவாவில் சி.ஐ.டி. என்றொரு கன்னட டப்பிங். உண்மையில் லக்‌ஷ்மி நடித்த முதல்ப் படம் இதுதான். ஜீவனாம்சம் பின்னால் எடுக்கப் பட்டதுதான்.’PANIC IN BANGKOK’ என்றொரு ஆங்கிலப் படம் வந்தது. கெர்வின் மேத்யூஸ், மற்றும் பியர் ஆங்லி நடித்தது. இதை காப்பியடிக்காத மொழிகளே இல்ல எனலாம்.ஹிந்தியில்  ‘FAARZ’ ஜிதேந்திரா நடித்த்து. இயக்கம் தந்திரக்காட்சிகள் மன்னன், கேமரா மேன் ரவிகாந்த் நகாய்ச், வெள்ளி விழா கண்ட படம். தெலுங்கில், கூடாஞ்சாரி 116’, கிருஷ்ணா-ஜெயலலிதா நடித்து, இதுவும் வெள்ளிவிழா கண்ட படம். இதையே தமிழாக்கம் செய்து உரிமையை மாடர்ன் தியேட்டர்ஸார், போட்டி போட்டு வாங்கி வைத்துக் கொண்டனர்.காரணம் அவர்கள் தமிழில் அதே கதையை “ வல்லவன் ஒருவன்ஆகப் படமாக்கிக் கொண்டிருந்தார்கள். வல்லவன் ஒருவன் பாட்டுப் புத்தகத்தின் பின் அட்டையில் எமது அடுத்த படம் ரகசிய போலீஸ் 116 என்றோ என்னவோ விளம்பரம் வேறு கொடுத்துக் கொண்டார்கள்.பட்த்தை வல்லவன் ஒருவன் படம் நன்றக ஓடிய பின் வெளியிடவும் செய்தார்கள். எல்லா எழவையும் நாங்கள் பார்த்தோம். கூடாஞ்சாரி 116 –பாதிப்படம் ஓடும் போதே ஏகப்பட்ட கலாட்டாவாகி மறுநாளே எடுத்து விட்டார்கள். தமிழ் ரசிகனென்றாலும் பொறுமைக்கு எல்லையுண்டு இல்லையா.
இதே போல பீஷ்மா கர்ணாஎன்று ஒரு டப்பிங் படம். கர்ணனுக்கு சற்று முன்னால்  வந்தது.அதன் தமிழக உரிமையை, கர்ணன் எடுத்துக் கொண்டிருந்த பந்துலு வாங்க முயற்சித்தார்,  முடியவில்லை என்று ஒரு செய்தி உலவியது. படம் உண்மையிலேயே நன்றாயிருக்கும்.இது தவிர இந்தில்யிலிருந்து ‘மாய மோகினி அல்லது ஹாத்திம்தாய், ஜிம்போ, நகரத்தில் ஜிம்போ என நிறய வந்து நன்றக ஓடியது. ஜிம்போவில் “ என் நெஞ்சம் உன்னை அகலாது, என் அன்பையசைக்க முடியாது....என்று சுஇசில்லவின் பாடல் பிரமாதமயிருக்கும். தமிழ் வசனம் பாடல்கள் குயிலன் . குயிலன் பாடல்கள் மெட்டுக்கு எழுதினாலும் பிரமாதமாய் இருக்கும். அவரையெல்லாம் தமிழ் சினிமா கொண்டாடவேயில்லை. அரபு நாட்டு அழகி என்றொரு படம் ‘வடநாட்டு எம்.ஜி.ஆர்  மஹிபால் நடித்த்து.இவருக்கும் எம்.ஜி.ஆரைப் போல நாடியில் ஒரு வெட்டு இருக்கும். வாள்ச் சண்டையும் நன்றாகப் போடுவார்.இதில் குயிலனின் பாடல் ஒன்றை அடிக்கடி இலங்கை வானொலியில் போடுவர்கள்.
என் அன்பைத் தேடுகின்றேன்
மாது எந்தன் மாறன் வா வா
என்னுள்ளத் தாமரைச்
செந்தேன் சுவைக்க ராணி வா வா”. ஏ.எம் ராஜா, சுசிலா குரலில் இனிமையான பாடல்.
தமிழ்ப் படங்களை இயக்கிய டைரக்டர் வரிசைகளைப் பார்த்தால் நிறைய தெலுங்கு இயக்குநர்கள் நல்ல படங்களைத் தந்துள்ளது தெரியும்.கே.வி.ரெட்டி, நாகிரெட்டி, பி.என்.ரெட்டி, எல்.வி பிரசாத், வேதாந்தம் ராகவைய்யா கே.பி.நாக பூஷணம், நாகேந்திர ராவ்,யோகானந்த், டி..பிரகாஷ்ராவ், கே.எஸ்.பிரகாஷ்ராவ், ஆதுர்த்தி சுப்பாராவ், சேஷகிரிராவ், தாபி.சாணக்யா,(எங்க வீட்டுப்பிள்ளை, காலம் மாறிப் போச்சு),புல்லையா, சி.ஹெச். நாராயணமூர்த்தி, சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் என்று நீளமான பட்டியல் இருக்கிறது. உண்மையில் தமிழின் மிகச் சிறந்த இயக்குநர் ஸ்ரீதரின் தாய் மொழி சுந்தரத் தெலுங்குதான்.



Sunday, August 12, 2012

நன்றி: காட்சிப் பிழை திரை:ஆகஸ்ட் 2012




தணிக்…..(கை)
பணமா பாசமா படத்தின் அசுர வெற்றிக்கு ஒரு காரணமாயிருந்த ”எயந்தப்பயம்….” பாடல் போடு போடென்று முழங்கிக் கொண்டிருந்தது, பட்டி தொட்டியெல்லாம். ரசிப்பதையும் ரசித்து விட்டு கண்ணதாசனைத் திட்டித் தீர்த்துக்கொண்டுமிருந்தார்கள்…..கலாச்சாரக் காவலர்கள்.
கைக்கு அடக்கமா..-நீ
கடிச்சுப்பார்க்க வாட்டமா
இருக்குது அதுதான் ஊரையெல்லாம்
இஸ்து இஸ்து இஸ்தூன்னு இயுக்குது..”
என்றொரு பல்லவி.இதில் விஜயநிர்மலாவின் சைகைகள்,பார்த்து - கைக்கு அடக்கமாஎன்னும் போது, ஒரு குத்து இலந்தைப் பழம் ஏந்திய கைகளை மார்புக்கு அருகே வைத்துக் கொள்ளுவார்…- தியேட்டரில் விசில் காதைப் பிளக்கும்..பெண்கள் பகுதியில் கூட சிரிப்பலை பரவ ஆரம்பித்திருந்தது. கண்ணதாசனை விமர்சித்ததிற்காக அவரோ சினிமாக்காரர்களோ பயந்து விடவில்லை. “உலகம் இவ்வளவுதான்படத்தில் மாம்பழப் பாடல்எழுதினார் கவிஞர்.
மாம்பழம் வாங்குங்க
மல்கோவா பழமுங்க
எல்லாம் வித்துப் போச்சுங்க
இருப்பது ரெண்டுதானுங்க…..
இதற்கும் கிட்டத்தட்ட அதே அபிநயம்.. இது தமிழ் நாட்டின் அனிதா எக்பெர்க்’ (பொக்காக்சியோ-70 படத்தில் அனித்தா எக்பெர்க்கின் மிகப்பெரிய,பிரபலமான மார்புகளை வைத்தே கதை நகரும்.) என்று எங்கள் தலை முறை செல்லம் கொண்டாடிய ராஜ்ஸ்ரீ (.இப்போதென்றால் நமீதாவை அந்த இடத்திற்கு தேர்ந்தெடுத்து விடுவார்கள் ’மச்சான்ஸ்’) இவையெல்லாம் 1967க்கு பின்னால் அரங்கேறிய காட்சிகள்.1967க்கு முன்னால் நடந்த ஆட்சியில் தோட்டம் வெட்டுகிற கத்திரிக் கோலால் காட்சிகளையும் பாடல் வரிகளையும் வெட்டிக் கொண்டிருந்தார்கள். இது இந்த உச்சம் என்றால் அது அந்த உச்சம். எல்லிஸ் ஆர் டங்கன், சுந்தர் ராவ் நட்கர்ணி காலங்களில் சட்டையே.அணியாமல் டி.ஆர் ராஜகுமாரி போன்றவர்கள் நடித்த காலம் போய், ஸ்கின் நிறத்தில் மெல்லிய நைலான் அணிந்து உடலைக் காட்டாமல் காட்டுவது 60 களின் ஆரம்பக் காலங்கள் வரை நடந்தது.படகோட்டி படத்தில் சரோஜதேவி சட்டை அணியாத மீனவப் பெண்ணாக (!)  வருவார் ஆனால் ஸ்கின் டைட்டாக மெல்லிய துணி அணிந்து அதன் ஸ்லீவ்ஸ் முடிகிற இடத்தில் வங்கி போல் ஒரு அணிகலனை/பாசியை அணிந்து கொள்ளுவார்.( சட்டையே போடவில்லை என்று பார்வையாளர்கள் ‘புரிந்து’ கொள்ள வேண்டும்.) தமிழ்ப் படங்களில் தொப்புள் காட்டும் கலாச்சாரத்தை 67 பொங்கல் ரிலீஸான “மனம் ஒரு குரங்கு” படத்தில், கதாநாயகியாக கே.ஆர் விஜயா ஆரம்பித்து வைத்தார்.அதற்கு முன்னால் குமாரி சச்சு ’தேன் மழை’ படத்தில் ஒரு பாடல்க் காட்சியில் ஒரு வினாடி, பாவாடை கட்டி கறுத்துப் போன இடுப்போடு, தொப்புள் காட்டுவார்.அதுவும் ஏதோ தற் செயல் போல அமைத்திருப்பார் ‘முக்தா சீனிவாசன்’. அவற்றைப் பார்த்தே ஜொள்ளு விட்டது அந்தத் தலை முறை.
64- 65 கால கட்டத்தில் காங்கிரஸ் ஆட்சி ஆட்டம் காணத் தொடங்கியது.இந்தி எதிர்ப்புப் போராட்டம், தி.மு.க வின் மாநாடுகள்,தெருவுக்குத் தெரு கூட்டங்கள்,எம்.ஜி.ஆர் படங்களின் தொடர்ந்த வெற்றி- தெய்வத்தாய் (மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்) படகோட்டி,, எங்க வீட்டுப் பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், என, எம்.ஜி.ஆர் படங்களின் தொடர்ந்த வெற்றி,ஆட்சியாளர்களை சற்று கவலைக்குள்ளாக்கியது.ஏற்கெனவே பராசக்தி படத்தையே தடை செய்திருந்தார்கள்.அண்ணா, கலைஞர் படங்களில்க் கூட நேரடியான தி.மு.க கட்சிப் பிரச்சாரம் வராது.கண்ணதாசன் நிறையச் செய்வார்.சிவகங்கைச் சீமை அவரது ட்ரீம் ப்ராஜக்ட். அது 1959-ல் வெளிவந்த போது,
“ வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்தது கிடையாது
 வீரர்கள் ஆளும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது”

என்று தொடங்கும் பாடல் அது வெளிவந்த நேரத்தில் வெட்டப்பட்டது”அதற்குக் காரணம் வெளிப்படைதான்.அதில் வரும் ஒரு சரணம்
“மன்றம் மலரும் முரசொலி கேட்கும்
வாழ்ந்திடும் நம் நாடு, இளம்
தென்றல் தவழும் தீந்தமிழ் பேசும்
திராவிடத்திரு நாடு –
இதில் வரும் “மன்றம் ,முரசொலி, நம்நாடு, திராவிடநாடு தென்றல் எல்லாம் தி மு க பத்திரிகைகள் தென்றல் மட்டுமே கண்ணதாசன் நடத்தியது.கருணாநிதி, அண்ணா  வசனத்திலோ  பாடலிலோ கூட  வெளிப்படையாய் இப்படி வந்தது கிடையாது.இது படத்தில் வெட்டப்பட்டு விட்டது என்று நினைவு. ஆனால் கடைசியில் குமாரி கமலாவின் ருத்தர தாண்டவத்துக்கு இடையே வரும் வசனம் வெட்டப்படவில்லை
“முரசொலிக்கட்டும், நம்நாடு தழைக்கட்டும்,மன்றத்திலே மக்கள் கூட்டம் திரளட்டும்,மலரட்டும் விடுதலை மலரட்டும்,தவழட்டும் தென்றல் தவழட்டும் வாழட்டும் திராவிட நாடு வாழட்டும்..”
http://www.youtube.com/watch?v=WkLsQECWtc4&feature=related கண்ணதாசன் ஒரு உணர்ச்சி மயமான மனிதன்.(குழந்தை)அதனாலேயே  அவர் அந்தந்தக் காலத்தின் நிலைப்பாட்டுக்கு விசுவாசமாயிருந்தார்.
அவர் 1958 ல் வெளியிட்ட மாலையிட்ட மங்கையில் வரும் எங்கள் திராவிடப் பொன்னாடே பால் முழுமையாய் பட்த்தில் இருந்தது, ஒரு ஆச்சரியம்தான். அதற்கு சற்று முன்னதாக வந்த கே.ஆர்.ராமசாமி நடித்து அண்ணா கதை வசனம் ழுதிய ‘சொர்க்க வாசல்’ , பீப்பிள்ஸ் பிலிம்ஸ் ’அவன் அமரன்(நிமாய்கோஷ்)எல்லாம் கடுமையான தணிக்கைக்குள்ளாயிருந்தன.
     1957-ல் வெளியான சக்கரவர்த்தி திருமகள் படத்தில் எம்.ஜி.ஆரின் பெயரே ‘உதயசூரியன்’ தான். அப்போது ஆட்சியாளர்கள் விழிக்கவில்லையா மெத்தனமா தெரியவில்லை.ஆனால் 1966-ல் வெளிவந்த அன்பேவா படத்தில், புதியவானம் புதிய பூமி பாடலின் முதல் சரணம்
“உதயசூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே…” என்ற வரி படத்தில் வரும் போது ’புதிய சூரியன்’ ஆகி இருந்தது.எங்க வீட்டுப் பிள்ளையின் பிரபல பாடலின் ஒரு வரி “இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்…” என்பது பாத்தில் இந்தக் காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன் என்று மாற்றப்பட்டது..பெற்றால்தான் பிள்ளையா  படத்தில், ”நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி.. ”பாடலில் ”மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்” என்பது ”மேடையில் முழங்கு திருவிக போல் என்று வெட்டி மாற்றப் பட்டது.( ஒரு நல்ல காரியம் திரு வி க என்றால் யார் என்று நிறையப் பேர்க்கு சொல்ல வேண்டியது நேர்ந்தது). இதை விட வேடிக்கை, அதில் வரும் ”சக்கரைக் கட்டி ராஜாத்தி” லவ் டூயட்டில்,
உறவைச் சொல்லி நான் வரவோ-
என் உதட்டில் உள்ளதைத் தரவோ…. என்பது என் உயிரை உன்னிடம் தரவோ என்று மாற்றப் பட்டது.இதே பாடலில் “பள்ளி கொள்வது சுகமோ” என்பது, பழகிக்கொள்வது சுகமோ என்று மாற்றப்பட்டது. அதே பாடலில் காலை வரையில் சேலை நிழலில் .. என்பதில் சேலை என்பது சோலை நிழலில் என்று மாற்றப்பட்டது. இந்தப் படத்தில் ஏன் இவ்வளவு வெட்டுகள். இதை மிகவும் எதிர் பார்த்தார்கள்.இது வந்த்து 1966 டிசம்பர் மாதம், 1967 ஃபெப்ரவரியில் தேர்தல். இந்தப்பட்த்தின் தயாரிப்பாளரான வாசுவுடன் எம்.ஆர்.ராதா சென்றபோதுதான் எம்.ஜி.ஆர், ராதாவால் சுடப்பட்டார்.
பணம் படைத்தவன் படத்தில்,
”அந்த மாப்பிள்ளை காதலிச்சான்
என்னை கையைப் புடிச்சான்…” என்று ஒரு பாடல். பாடல் ஒரு அபத்தக் களஞ்சியம்தான்.அதை மூன்றாம் நாளே, தயாரிப்பாளர்களே நீக்கியும் விட்டார்கள். (பின்னால் சேர்க்கவும் பட்டது). அதில்
அம்மம்மா என்ன சுகம்
அத்தனையும் கன்னி சுகம்… என்பது

அம்மம்மா என்ன சொல்ல
அத்தனையும் கண்டதல்ல- என்று மாறியிருக்கும்.இதிலெல்லாம் வாயசைப்பு மாற்றத்தைத் தெளிவாகக் காட்டிவிடும்.
அதே சமயம்
”சுற்றி நான்கு சுவர்களுக்குள்
தூக்கமின்றிக் கிடந்தோம்-சிறு
துன்பம் போன்ற இன்பத்திலே
இருவருமே மிதந்தோம்” என்ற ‘அன்னை இல்லம்’ பாடல் எல்லாம் சென்சாரின் கண்ணுக்குத் தெரியலையா என்று ரசிகர்கள் பேசிக் கொள்வோம்.சிவாஜி நடித்த,ஏஎல்.எஸ் படமான ”சாந்தி”ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு போஸ்டர்கள் எல்லாம் ஒட்டப்பட்ட நிலையில், அதன் கதை, தமிழ்ல் கலாச்சாரத்துக்கு எதிரானது என சென்ஸாரால் மறுக்கப் பட்டு, மறுபடி அப்பீல் எல்லாம் செய்து ஒருமாதம் போல் தாமதமாக வந்தது..வல்லவன் ஒருவன் படத்தில், தொட்டுத் தொட்டுப் பாடவா…பாடலில்,
”ஆடவந்த கன்னியின் அந்தரங்கம் வேண்டுமா…” என்பது சற்றே நியாயமாக ஆடவந்த கன்னியின் அந்த நெஞ்சம் வேண்டுமா என்று மாற்றப் பட்டது
சந்திரோதயம் படத்தில்,” சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ..” பாடலில்
“ இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ
இருக்கின்ற சுகம் வாங்கத் தடை போடவோ..” என்பது
எழிலோடு எழில் சேர்த்து இமை மூடவோ
எனக்கிந்த சுகம் வாங்கத் தடை போடவோ என்று மாறியிருந்தது. ஆனால் இதில் வாயசைப்பும், நடிப்பும் மாற்றத்திற்கு ஏற்பவே இருக்கும்.சந்திரோதயம் 1966 மே 30-ல் வந்தது.(அன்றுதான் ஜெயலலிதாவிடமிருந்து கையெழுத்திட்ட புகைப்படமும், கடிதமும் எனக்கு வந்தது அதோடுதான் படம் பார்க்கப் போயிருந்தேன்.) இந்தப்படம் வெளிவந்த சமயத்தில், தினத்தந்தி பத்திரிக்கைக்கும் எம்.ஜி.ஆருக்கும் கடுமையான மனத்தாங்கல்.அவரது செய்திகள் வராது, பட விளம்பரங்களும் வராது.சந்திரோதயம் படத்திற்கு வசனம் ஏ.கே.வில்வம் என்பவர். அவர் தினத்தந்தியில் இருந்து வெளியேறியவர்.படம் வந்த ஓரிரு வாரத்தில், தந்தியில் குரும்பூர் குப்புசாமி எழுதிய சிறுகதையொன்று வெளிவந்தது.அதில் ஒரு காட்சி.ஒருவர் நாயுடன் உலா வருவார். மற்றொருவர், சார் நாய்க்கு என்ன பேர் வைத்திருக்கிறீர்கள் என்பார், முதலாமவர் ‘வில்வம்’ என்பார். ஏன் சார் நன்றியில்லாதவன் பெயரையெல்லாம் நாய்க்கு வைக்கிறீர்கள் என்பார். (இது பற்றி பின்னாளில்(1973) புயலிலே ஒரு தோணி ப.சிங்காரத்திடம் பேசினேன், சிரித்துக் கொண்டார்)
     அப்புறம் எம்.ஜி.ஆர் குண்டடி பட்டதும் சண்டையெல்லாம் சமாதானமாகிவிட்டது, அதுதான் எம்ஜியாரின் ராசி. இதே போல் எமர்ஜன்சி சமயத்தில் ஊருக்கு உழைப்பவன் படத்தின் சண்டைக் காட்சிகள் எல்லாம் வன்முறையென்ற பெயரால் வெட்டப்பட்டன. எம்.ஜி.ஆர் படத்தில் ஹெலிகாப்டர் சண்டையே அதில்த்தான் எடுத்தார்கள். ரொம்ப எதிர் பார்த்தார்கள். சுத்தமாய் ஒன்றுமேயில்லை. ஒரு காமெடி சண்டைதான் மிஞ்சியது. பாலிவுட்டிலிருந்து ஷெட்டி என்ற பயங்கர வில்லன்களுடனெல்லாம் சண்டைக் காட்சிகள் படமாக்கப் பட்டிருந்தன.எல்லாம் தணிக்கை என்ற பெயரால் கை வைக்கப்பட்டது.