Tuesday, November 22, 2011




தகவமைப்பு



கனத்த சொற்களை

இரையெடுத்திருந்தது

எந்த விமர்சனக்

கல்லோ கழியோ

வசமாய்

நடூஉக் குறுக்கில்

ஒரு காயம் வேறு

நெளியமாட்டாமல் கிடக்கிறது



செரிமானமோ நகர்வோ

இனிச் சாத்தியமில்லையென

நம்பிக்கையின்றி

பருந்துப் பார்வைக்குப் பயந்து

மேகம் பார்த்து

மதில்ச் சுவரொட்டிக் கிடக்கிறது.



பூ நாடி வரும்

பறவைகள் வண்டுகள்

பட்டாம் பூச்சிகள் யாவும்

மகரந்தப் புரளல்

மறந்து விலகிப்பறக்கின்றன



பச்சைப் பாம்பு

என்பதால் நீங்கள்

பயமின்றி

வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்

                                -கலாப்ரியா




3 comments:

இரா. பாலா said...

மிக அருமை.நன்றி ஐயா!

ந.பெரியசாமி said...

பாம்பையே படுக்கையாக்கிய ரங்கநாதரின் நினைவு வர நேசிப்போடும் வாசிக்க முடிந்தது

உயிரோடை said...

பச்சைப் பாம்பு
என்பதால் நீங்கள்
பயமின்றி
வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்

கொஞ்சம் பயமா தான் இருந்தது. இருந்தாலும்... நல்ல கவிதை கலாப்ரியா சார்

Visitors