Wednesday, July 29, 2009




I HAVE GOT MY LEAVE. BID ME FAREWELL MY BROTHERS
I BOW TO YOU ALL AND TAKE DEPARTURE
HERE I GAVE BACK THE KEYS OF MY DOOR
AND I GIVE UP ALL CLAIMS TO MY HOUSE.
I ONLY ASK LAST KIND WORDS FROM YOU.

WE WERE NEIGHBOURS FOR LONG, BUT
I RECEIVED MORE THAN I COULD GIVE.
NOW THE DAY HAS DAWNED AND THE LAMP
THAT LIT MY DARK CORNER IS OUT.

A SUMMONS HAS COME
AND IAM READY FOR MY JOURNEY.

-TAGORE


நான் பணி நிறைவு பெறுகிறேன்.
என்னை வாழ்த்திட வாருங்கள்.

உங்கள் அனைவருக்கும் சிரம் தாழ்த்தி
விடை பெறுகிறேன்.
என் இதயக் கதவின் சாவிகளையும்,
என் எல்லாவற்றையும்
உங்களது என்றைக்குமான
அன்புக்கு பிரதியாய்
உங்களிடமே தருகிறேன்.
நாம் அடுத்தடுத்து இருந்தோம் இது வரை
நான் தந்ததை விட உங்களிடம்
பெற்றுக் கொண்டதே அதிகம்
இரவில் ஏற்றி வைத்த விளக்கின் ஒளியை
மங்க வைக்கும் பிராகாசம் மிக்க
அந்தக் காலை புலர்ந்து விட்டது

ஆம் அழைப்பு வந்து விட்டது
உங்கள் அன்பின் துணையோடு
ஒரு புதிய பயணத்திற்கு நான் தயாராகிறேன்
விசால மனத்துடன் விடை தாருங்கள்

(தமிழ்ப்`படுத்தியது'- நான்)

31.07.2009 அன்று ஐ.ஓ.பி யிலிருந்து பணி நிறைவு பெறுகிறேன்.
இனி நான் 'மேனாள்' ஐ.ஓ.பி. ஊழியர்.

14 comments:

குப்பன்.யாஹூ said...

oh all the best

Vidhoosh said...

வாழ்த்துக்கள். இனி நிறைய ப்ளாக பார்க்கலாம். நாங்கள் எல்லாம் எங்களுக்கும் சீக்கிரம் அந்நாள் வந்தேவிடாதா என்று ஏங்குகிறோம்.
---வித்யா

Unknown said...

வாழ்த்துக்கள்! தாகூர் மாதிரி வெண்தாடியும் கவிதையுமாக வாழ்க்கை தொடரட்டும்.
சித்ரா

rvelkannan said...

வாழ்த்துக்கள் ஐயா!
இனி உங்களின் வலையில் பூக்கள் பூத்து குலுங்கும்
ஆஹா... நினைத்து பார்க்கவே நெஞ்சம் மகிழ்கிறது
(மன்னிக்கவும் இது எங்களையுடைய சுயநலம் )

சென்ஷி said...

தங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அய்யா!

எல்லா நலமும் வளமும் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

-சென்ஷி

நேசமித்ரன் said...

சொற்களில் பால்யத்தின் மிச்சம் இன்னும் வைத்திருக்கும்
உங்களுக்கு அறுபது வயதாகி விட்டதா ? பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா
நான் பார்க்கும் உலகத்தில் உங்களின் பார்வையும் இருப்பதற்கு என்றும் உங்களுக்கு நன்றிக்கு உரியவன் .
உங்களின் ஒய்வு நாட்கள் நீங்கள் விரும்பியவாறே அமைதியும் ஆரோக்கியமும் நிறைந்ததாக அமைய வாழ்த்துகிறேன்

துபாய் ராஜா said...

வணக்கமும் வாழ்த்துக்களும்.

ஓய்வு நேரத்தில் உங்கள் வாழ்க்கை அனுபவங்களை பதிவுகளாக எழுதி எங்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும்.

எட்டயபுரம் எல்லோருக்கும் இனியபுரம்.

தங்களை பற்றி நான் எழுதிய பதிவின் சுட்டி.http://rajasabai.blogspot.com/2009/07/blog-post_20.html

M.Rishan Shareef said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

யாத்ரா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்,

//உங்கள் அன்பின் துணையோடு
ஒரு புதிய பயணத்திற்கு நான் தயாராகிறேன்//

மதுரையில் உங்களை சந்தித்து ஓரிரு சொற்களையும் கைக்குலுக்கலையும் புன்னகையையும் பறிமாறிக் கொள்ள முடிந்த அந்த சிலிர்ப்பான தருணங்கள் எனக்கு என் வாழ்வில் மிக முக்கியமானவை.

சி. முருகேஷ் பாபு said...

அண்ணாச்சிக்கு அறுபது வாழ்த்துக்கள் - அன்புத்தம்பி முருகேஷ் பாபு

Saran said...

வாழ்த்துக்கள் ஐயா!
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

rajasundararajan said...

Dear Kalapria,

Wish you a fruitful retired life. I'm impressed with the so many small small characters in your blog writings. Take care.

- Rajasundararajan

kalapria said...

அன்புள்ள ராஜ சுந்தர ராஜன்
எவ்வளவு நாட்களாயிற்று உங்களையெல்லாம் பார்து, பேச். நீங்கள் ப்லாக்கை வாசிக்கிறீர்கள் என்பது மன நிறைவவை அளிக்கிறது.அடிக்கடி தொடர்பு கொள்ளுங்கள்.கலாப்ரியா

rajasundararajan said...

Dear Kalapria,

I must thank S.Ramakrishnan who linked your blog. I've read all your old writings too. Highly refreshing.

Rajasundararajan

Visitors